Share via:
தமிழக அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட உள்ள மாற்றம் யாருக்கு ஏற்றம் யாருக்கு ஏமாற்றம் என்று பேசியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், வாரிசு அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து பேசிய அவர், அமைச்சரவை மாற்றம் என்பது அமைச்சர் உதயநிதிக்கு ஏற்றமாகவும், அண்ணன் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கு என்று தெரிவித்தார். இதில் யாருக்கு ஏற்றம், யாருக்கு ஏமாற்றம் என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதில் எல்லோருக்கும் ஏற்றமாக இருக்காது என்றாலும் பலருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் என்று விமர்சித்தார்.
தற்போது அமைச்சர் உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி சூட்ட அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. வாரிசு அரசியல் முறையில் இவர்கள் போன்றவர்கள் பதவிக்கு வந்தால், அரசாங்கத்துக்கும், ஆட்சிக்கும், ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல என்று பேசினார்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் இதுவரை மொத்தம் 17 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளது. யாரை காப்பாற்றுவதற்காக இந்த என்கவுண்டர்கள் நடைபெறுகிறது என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமூகநீதியை பற்றி பேசும் அதே நேரம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. ஆனால் அதை பின்பற்றமாட்டார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுளை தமிழிசை சவுந்தரராஜன் முன்வைத்து பேசினார்.