News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் கட்சியின் கொடியில் இருக்கும் யானை விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் கூறியதை அடுத்து விஜய் கூடாரத்தில் பெரும் கொண்டாட்டமே நடக்கிறது. இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு கடும் எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.

தஞ்சாவூரில் பேசிய புஸ்ஸி ஆனந்த், ‘’மாநாட்டுக்கு வர்றது முக்கியம். லீவு கிடைக்கலைன்னா வேலையே போனா என்ன? வேலையே வேண்டாம்ன்னு தளபதிய பாக்க வர்றவன் தான் உண்மையான தொண்டன்’’ என்று பேசியது செம வைரலாகியது.

‘’வேலை வேண்டாம்னு விட்டுட்டு வந்தா அடுத்த வேல சோறு என்ன உங்கொப்பனா போடுவான்’’ என்று கேட்டு வருகிறார்கள். அதோடு, ரசிகர் மன்றத்தினர் தன்னுடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை ஆதரிப்பதாகவும் விமர்சனம் செய்யப்படுகிறது. புஸ்ஸி ஆனந்தை தட்டி வைக்கவில்லை என்றால் அவர் விஜய்க்கே சிக்கலை ஏற்படுத்திவிடுவார் என்று விஜய் கட்சியினரே வருத்தம் தெரிவித்தார்கள்.

இந்த விவகாரம் விஜய் காதுக்குப் போனதும் கடுமையான ரெய்டு விட்டிருக்கிறார். ‘மாநாடு ஆரம்பிப்பதற்குள் சிக்கல் உருவாக்கிவிடாதீர்கள். முதலில் நம்முடைய கருத்தை தெளிவாகப் பதிவு செய்யுங்கள்’ என்று விரட்டினாராம். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த், ‘’முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும் பிறகு தொழிலை பார்க்க வேண்டும் அதில் வரும் வருமானத்தில் இருந்து ஒரு சதவீதமோ இரண்டு சதவீதமோ சேவை செய்ய வேண்டும் எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்று சொல்லுகிற தலைவன் தளபதி என்பதை சொல்லிக் கொள்கிறேன்’’ என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். நிர்வாகிகளை காலில் விழக்கூடாது என்றும் கண்டிப்பு காட்டியிருக்கிறாராம்.

அதுசரி, யார் இநத புஸ்ஸி ஆனந்த்..?

புதுச்சேரியில் ஒரு சிறிய சட்டமன்றத் தொகுதி தான் ‘புஸ்ஸி தெரு’. இந்த தொகுதியில் புதுச்சேரி கண்ணன் தொடங்கிய புதுவை மாநில காங்கிரஸ் சார்பில், 2006-ம் ஆண்டு தேர்தலில் நின்று 2,500 ஓட்டுகள் வாங்கி ஜெயித்து, பின்பு அதே தொகுதியில் 2 முறை தோற்றவர் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரியில் சாதாரண விறகுக்கடை வியாபாரம் செய்து வந்த புஸ்ஸி ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் சாதாரண கிளை தலைவராக இருந்து வந்த இவரை, தமிழக விஜய் ரசிகர் மன்றத் தலைவராக பதவி கொடுத்தவர் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.

கடைசியில், புஸ்ஸி ஆனந்த் கேரளா மந்திரவாதிகளை வைத்து எனது மகனை எங்களிடம் இருந்து பிரித்து விட்டார் என விஜய்யின் அப்பா, அம்மா புலம்பும் அளவிற்கு,பெற்றோரை பிரித்து விஜய்யிடம் பெரும் செல்வாக்கு பெற்றவர் தான் இந்த புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரியில் குடியிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்களின் வில்லங்கமான சொத்துக்களை அபகரிப்பதுதான் புஸ்ஸி ஆனந்தின் முழுநேர தொழில் என இவர் மீது பல வில்லங்கமான புகார்கள் உள்ளன.

புஸ்ஸி ஆனந்த் முயற்சியால்,புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி பலமுறை விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். விஜய் தமிழகத்தின் முதல்வர் ஆகிவிட்டால் புதுவை முதல்வராக வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் ஆசைப்படுகிறார்.

விஜய் சொல்வதை நிறைவேற்றுவாரா என்று பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link