Share via:
கருணாநிதியை எதிர்த்து கட்சி தொடங்கினார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
அதே வழியில் கருணாநிதியை கடுமையாக எதிர்த்து
கட்சி நடத்தினார் புரட்சித்தலைவி ஜெயலலிதா. அதே வழியில் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை
எதிர்த்து கட்சிநடத்திக்கொண்டு இருக்கிறார். எந்த நிலை வந்தாலும் திமுகவினருக்கு எதிராக
நின்று எதிராக அரசியல் செய்வது தான் அ.தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு.
இந்த நிலையில் அரசியல் நாகரீகம் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்
ரவீந்திரநாத் கொஞ்சம் கூச்சமே இல்லாமல் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி கூறி பதிவு வெளியிட்டிருப்பது
கடும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. இதையடுத்து பன்னீர்செல்வத்தையும் அவரது மகன் ரவீந்திர்நாத்தையும்
எடப்பாடி டீம் ஆட்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து பேசும் எடப்பாடி ஆதரவாளர்கள், ‘’அரசியல் நாகரீகம்
என்ற பெயரில் பன்னீரின் மகன் செய்யும் அநாகரீகத்தை எல்லாம் வேடிக்கை பார்க்க இயலாது.
ஏன் இவ்வளவுப் பிடிவாதமாய் பன்னீர்செல்வத்தை அண்ணாதிமுகவில் சேர்க்க முடியாது என்று
எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாய் மறுக்கிறார் என்று புரிகிறதா..? உதயநிதிக்கு வாழ்த்து
தெரிவிக்கும் இவனை அண்ணாதிமுகவிற்குள் விட முடியுமா..? உதயநிதியை துணை முதல்வராக்கியதற்கு
ஸ்டாலினுக்கு நன்றி சொல்லும் இந்த நன்றிகெட்ட நா*யை என்ன செய்யலாம்..? உணர்வுள்ள ஒரே
ஒரு அண்ணாதிமுககாரன், பன்னீர்செல்வத்தின் பின்னால் நிற்க மாட்டான். அப்பனும் மவனும்
கட்சியின் இமேஜை மொத்தமாய் சரித்தவர்கள் மோடிபுகழ் பாடியும், ஸ்டாலின்புகழ் பாடியும்.
தேசம் முழுக்கத் ஓடினாலும் நாசமாய் போகட்டும் நாய்கள்’’ என்று கடுமையாக பதிவு போடுகிறார்கள்.
அதற்கு பன்னீர் டீம், ‘’எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தி.மு.க.வில்
கூட்டணி வைத்திருக்கிறார். அதனால் தான் அவர் மீது வழக்குப் பதிவு ஆகவில்லை. தி.மு.க.
ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைப்புக்கு மறுக்கிறார். என் மகனைச் சொல்கிறார்கள்.
ஆனால், அவர்கள் அனைவரும் ரகசியமாக உதயநிதிக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்கள். முன்னாள்
அமைச்சர் வைகைச்செல்வன் நேரடியாகவே கோவி செழியனைப் பாராட்டி இருக்கிறார். இதற்கு யார்
பதில் சொல்வது?’’ என்று கேட்கிறார்கள்.