Share via:
தமிழக வெற்றிக்கழகத்தோட முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில இந்த மாதம் (அக்டோபர்) 27ம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு மூச்சுடன் மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் முன்னதாக தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சித்தலைவர் விஜய் மற்றும் புஸ்சி ஆனந்த் அன்புக்கட்டளையிட்டுள்ளனர்.
அதன்படி மாவட்ட செயலாளர்கள் ஒன்றிணைந்து மாநாட்டிற்கான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாநாட்டிற்கான பூஜை நாளை மறுநாள் (அக்டோபர் 4ம்தேதி) காலை 8 மணியளவில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அறிவித்துள்ளார். பூமி பூஜைக்கு பின்னர் மாநாட்டு திடலில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் தமிழக வெற்றிக்கழக கொடி குறித்து அறிவிப்பேன் என்று ஏற்கனவே விஜய் அறிவித்துள்ள நிலையில், அது என்னவென்றும், மாநாட்டில் அவர் சொல்லப் போகும் குட்டி ஸ்டோரியை கேட்கவும் நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.