News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழக அரசின் உத்தரவின்படி முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி உயர்கல்வித்துறை செயலாளராக இருந்து வந்த பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் உயர்கல்வித்தறை செயலாளராக கோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

 

* கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக பதவி வகித்து வந்தார்.

 

* தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வரும் சத்யபிரதா சாகு, கூடுதலாக கால்நடைத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

* விஷ்ணுவர்த்தன் ஐ.ஏ.ஏஸ். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

* தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

* கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளராக அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூகநலத்துறையை பொறுத்தவரை அதன் செயலாளராக லில்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

 

* சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதியின் துணை ஆணையராக பிரத்திவிராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link