Share via:
விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டையில் கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை
ஒருவர் தலை முடியை இழுத்து தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து எடப்பாடி
பழனிசாமி, ‘’விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும்
தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்களை பாதுகாக்க
வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத
சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம்.
அருப்புக்கோட்டை
பெண் டிஎஸ்பி காயத்ரி அவர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை
எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம்
யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு நடவடிக்கை எடுக்க
வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சம்பவ
இடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் ஆய்வு செய்து, டி.எஸ்.பி.யை தாக்கிய விவகாரத்தில்
4 பேரை கைது செய்தார். பாலமுருகன் என்பவரே தலைமுடியை பிடித்ததாக கூறப்படும் நிலையில்,
அவர் இன்று பாத்ரூமில் வழுக்கிவிழுந்து கையை உடைத்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது மட்டும் போதாது,
போலீஸ் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பது தெரியும் வகையில் இன்னும் பெரிய அதிரடி
நடவடிக்கை வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக இருக்கிறது.