News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அறிவியல் வளர்ச்சியை முன்னெடுத்துக் கொண்டுசெல்வதில் தமிழகம் எப்போதும் முன்னணியில் நிற்கும். அந்த வகையில் இ-ஆபிஸ், செயற்கை நுண்ணறிவு முதலீட்டு வாய்ப்புகள் என்று இந்தியாவின் முதல் ஹைடெக் முதல்வராக அசத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.

இன்று முதல்வர் ஸ்டாலின், “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது என்று இ-சைன் போடும் புகைப்படம் வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து ’செயற்கை நுண்ணறிவு ஆற்றலைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்” என்று கூறியிருப்பதுடன், “செயற்கை நுண்ணறிவு முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து BNY MELLON உடன் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவு ஆற்றலைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்,” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது, சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகில் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் பத்துக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்டாலின் ஆக்கபூர்வ நடவைக்கைகள் தொடர்கின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link