Share via:
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை உதயநிதி தலைமையில் வெல்வதற்கு தி.மு.க.
அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதனாலே துணை முதல்வர் பதவி வழங்கப்படும் முடிவில்
இருக்கிறார்கள். வரும் 19ம் தேதி பதவியேற்பு விழா இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில்,
செந்தில்பாலாஜி வெளியே வந்ததும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் நேரத்தில் தான்
உதயநிதிக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது.
அமலாக்கத்துறை வழக்கில் சமீபத்தில் டெல்லி அமைச்சர் மனீஷ் சிசோடியாவுக்கு
கிட்டத்தட்ட 17 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியுள்ளது. விசாரணை முடிவடையும் வரை
ஒருவரை காவலில் வைப்பது அரசியல் சாசனப் பிரிவு 21 மீறும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கிலும் இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், ‘செந்தில் பாலாஜிக்கும் அதே வகையில் ஜாமீன் வழங்க
முடியும்தானே?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். மூன்று மாதத்தில் விசாரணை முடிவடையும்
என்ற அமலாக்கத்துறையின் வாதத்தை நீதிபதி நிராகரித்திருக்கிறார்.
அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர்கள் நியமனம் குறித்து வாதிடப்பட்டது.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத் துறை சார்பில்
வாதாடிய வழக்கறிஞர்களிடம், ‘மூன்றாவதாக புதிய குறிப்பு ஒன்றை தாக்கல் செய்து வாதிட
வேண்டும் எனக் கூறுகிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய குறிப்பு சொலிசிட்டர்
அல்லது அமலாக்கத் துறை வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்படுகிறது. இன்னும் எத்தனை குறிப்புகள்
முன்வைக்க உள்ளீர்கள்?’ என்று நீதிபதிகள் கேள்வி அப்போது செந்தில் பாலாஜி தரப்பில்,
‘வழக்குக்கு சம்பந்தமில்லாத வாதங்களை எல்லாம் அமலாக்கத் துறை முன்வைத்து வருகிறது’
என்று கூறப்பட்டது.
விசாரணை தாமதம் ஆவது குறித்து தனியாக நாங்கள் அறிக்கை தாக்கல்
செய்யவுள்ளோம்’ என்று கூறப்பட்டது அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஒவ்வொரு முறை இந்த
வழக்கு விசாரணைக்கு வரும்போது அமலாக்கத் துறை வெவ்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டிக்
கொண்டே இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்
கீழ் இந்த விவகாரத்தில் விசாரணை நடைமுறைகளை தான் நாங்கள் விசாரிக்கிறோம். ஒரு வழக்கின்
விசாரணை முடியும் வரையில், ஒருவரை சிறையிலேயே தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்று
உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. மனுதாரர் 13 மாதங்களாக சிறையில்
இருக்கிறார். தற்போது வரை இந்த வழக்கில் விசாரணை தொடங்கவில்லை.
விசாரணை எப்போது தொடங்கும் என்பதும் தெரியவில்லை வழக்கில் விசாரணை
நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எப்போது தான் விசாரணையை தொடங்கும்? இதற்கு அமலாக்கத்துறை
தரப்பில் 3 மாதங்களில் விசாரணை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறையின்
இந்த வாதத்தை உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா ஏற்க மறுத்து நிராகரித்தார். இந்த வழக்கில்
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
நிச்சயம் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். அப்படி ஜாமீன்
கிடைக்கும் பட்சத்தில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் நேரத்தில் செந்தில்பாலாஜிக்கும்
பதவி வழங்கப்படும் என்றே தெரிகிறது.
செந்தில் பாலாஜிக்கு பதவி கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பினாலும்,
அந்த விவகாரத்தில் உதயநிதிக்கு பதவி கொடுப்பதற்கு எதிர்ப்பு குறைந்துவிடும் என்று தி.மு.க.
திட்டம் போடுகிறதாம். அதனால் தான் உதயநிதிக்கு புரமோஷன் கொடுப்பது தள்ளிப் போகிறது
என்கிறார்கள்.