Share via:
கருணாநிதிக்கு நாணயம்
வெளியீடு என்ற ஒரே ஒரு விழா தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலையும் புரட்டிப் போட்டுள்ளது.
தி.மு.க.வை குழி தோண்டிப் புதைக்கத்தான் வந்திருகிறேன் என்று வீராவேசம் காட்டிய அண்ணாமலையும்,
மோசமான வைரஸ் பா.ஜ.க. என்று விமர்சனம் செய்த தி.மு.க.வும் பாசமலர்களாக கட்டிப் பிடித்துக்
கொஞ்சினார்கள். இந்த காட்சிகளைப் பார்த்த உ.பி.க்களும் சங்கிகளும், ’இத்தனை நல்லவங்கன்னு
தெரியாம கருணாநிதியையும் அண்ணாமலையையும் விமர்சனம் செய்துவிட்டோமே’ என்று பதறிக் கிடக்கிறார்கள்.
இதுவரையிலும் கருணாநிதியை
விஞ்ஞான ஊழலுக்கு சொந்தக்காரர் என்று பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்து வந்த நிலையில்
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, ’இந்தியா தேசத்தின் வளர்ச்சியை தொலை நோக்கு பார்வையோடு
திட்டம் தீட்டியவர் கருணாநிதி’ என்று பாராட்டுக் கடிதம் அனுப்பியபோதே அத்தனை பா.ஜ.க.
தொண்டர்களும் அலறிவிட்டார்கள்.
தி.மு.க.வை திருட்டு தி.மு.க. என்றும் தி.மு.க. ஃபைல்ஸ்
வெளியிட்டு அவமானப்படுத்திய அண்ணாமலை பவ்யமாக உதயநிதிக்கு முன்பு நின்றது தமிழக மக்களுக்குக்
கண் கொள்ளாக் காட்சியாக மாறியது.
ஏற்கெனவே கருணாநிதி
வெண்கல சிலை திறப்புக்கு ஆர்.எஸ்.எஸ் வெங்கையா நாயுடுவை அழைத்திருந்த தி.மு.க. இப்போது
ஆர்.எஸ்.எஸ் ராஜ்நாத்சிங் மூலம் நாணயம் வெளியிட்டுள்ளது. அதோடு, இந்த நாணயத்தை வெளியிட,
இவரை விட சிறந்த ஒருவர் இல்லவே இல்லை என்று ஸ்டாலின் பேசி இண்டியா கூட்டணியின் முகத்தில்
கரியைப் பூசியிருக்கிறார்.
நாணய வெளியீட்டு
விழாவில் பா.ஜ.க. அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டதை அரசு விழா என்று ஒப்புக்கொள்ளலாம்.
அந்த ராஜ்நாத் சிங் நேரடியாக கருணாநிதி சமாதிக்குப் போவதும், அங்கே அண்ணாமலை முன்னுக்கு
வாங்க என்று ஸ்டாலின் அன்போடு அழைப்பதும், கருணாநிதியின் சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி
செலுத்தியதும் சாதாரண காட்சிகளல்ல.
இவை எல்லாம் போதாது
என்று ஸ்டாலின் விழா மேடையில் பேசியது செம ட்விஸ்ட். அதாவது, ‘’பாஜகவுடன் ரகசிய உறவு
வைத்திருப்பதாகக் கிளப்பி விடுகிறார்கள். அப்படி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
திமுக எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்க்கும்; ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிக்கும்’’
என்று கூறியிருக்கிறார்.
இப்போது ஆதரிக்கும்
அளவுக்கு பா.ஜ.க.வின் கொள்கையில் என்ன மாற்றம் செய்திருக்கிறது என்பது தான் கேள்வி.
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மொட்டை அடிச்சாட்டங்கப்பா.