Share via:
விஜய் கட்சியின் கொடியில் வாகை மலர் மட்டும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், சிவப்பு மஞ்சள் நிறமும் இரண்டு யானைகளுக்கு நடுவில் வாகை மலர் இருக்கும்படி
அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி உருவாக்கப்பட்டதற்குப் பின்னணி குறித்து விரைவில் பேசுவேன்
என்று நடிகர் விஜய் கூறியிருக்கிறார். அதாவது, கொடிக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து
முழுமையாக அறிந்துகொண்டு, முதல் மாநாட்டில் இது குறித்து பேசுவார் என்று சொல்லப்பட்டது.
விஜய் கட்சியின் வாகை மலரைச் சுற்றி 28 நட்சத்திரங்கள் இருக்கின்றன.
அதில் ஐந்து ஸ்டார் மட்டும் நீல நிறத்தில் இருக்கின்றன. இதற்கும் ஒரு முக்கியக் குறியீடு
இருப்பதாக சொல்லப்படுகிறது. கோயில் சுவரில் காவி வெள்ளை அடிப்பதையே மாற்றி அடித்திருக்கிறார்
என்றும் சொல்லப்படுகிறது.
உதயநிதியின் பாணியில் விஜய் கொடியைப் பிடித்திருக்கிறார் என்று
தி.மு.க.வினர் முதன்முதலாக டிரோலை தொடங்கி வைத்தார்கள். இதையடுத்து சின்னம் அறிவிக்கப்பட்ட
சில நிமிடங்களுக்குள் பகுஜன் சமாஜ் கட்சி கடும கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.
இந்த சின்னத்தை உடனடியாக மாற்றவில்லை என்றால் நீதிமன்றத்துக்குச்
செல்வோம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் சில சிக்கல்களும்
விஜய் கொடிக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஃபெவிகால் விளம்பரத்தில் இருக்கும் யானையை திருப்பிப்
போட்டுவிட்டார் என்று பலரும் கிண்டல் செய்துவருகிறார்கள். அது மட்டுமின்றி, சரத்குமார்
நடத்திவந்த சமத்துவ கட்சியின் கலரை திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த நிலையில், கேரள ஸ்டேட் ரோடு காப்பரேஷனின் சின்னத்தைத் திருடி
விட்டார் என்றும் ஸ்பானிஷ் நாட்டுக் கொடியின் நிறத்தில் சின்னத்தை மட்டும் மாற்றியமைத்துள்ளார்
என்றும் வரிசையாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதையடுத்து எக்கச்சக்க குழப்பத்தில்
இருக்கிறார் விஜய்.