Share via:
விஜய் கட்சியின்
கொடி வெளியான நேரத்தில் இருந்தே எக்கச்சக்க மீம்ஸ்களும், விமர்சனங்களும் வந்துகொண்டே
இருக்கின்றன. இந்திய யானை என்றால் காதுகள் சிறியதாக இருக்கும் விஜய் கொடியில் இருப்பது
ஆப்பிரிக்க யானை. வாகைப் பூ என்று தூங்குமூஞ்சிப் பூ வைத்திருக்கிறார் என்றெல்லாம்
சொல்லப்பட்டு வந்த நிலையில், கிறிஸ்தவக் குற்றச்சாட்டு அதிரடியாக எழுந்துள்ளது.
விஜய்யின் உண்மையான
பெயர் ஜோசப் விஜய். எனவே, அவர் விவிலியத்தின் பார்வையில் தன்னுடைய கட்சிக் கொடியை வடிவமைத்து
இருக்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
அதன்படி, ‘புனிதப்
போர் காலகட்டத்தில் இரட்சிப்புக்குழுவின் கொடியில்சிவப்பும் மஞ்சளுமே இடம் பெற்றிருந்தது.
இதில் சிவப்பு நிறம் இயேசுவின் குருதியையும் மஞ்சள் நிறம் பரிசுத்த ஆன்மா வையும் குறிக்கிறது.
இக்கொடியில் 28 நட்சத்திரங்கள்
உள்ளன. விவிலியத்தில் 28 என்பது முக்கியமான எண். பழைய ஏற்பாட்டை எழுதியவர்கள் 28 பேர்.
பைபிளில் ‘அல்லேலூயா’எனும்
சொல் 28 முறை வருகிறது. இயேசுவை பாவங்களை நீக்கும் ஆட்டுக் குட்டியாக 28 முறை குறிப்பிடு
கிறார்கள்.
இக்கொடியிலுள்ள 28
நட்சத்திரங்களுள் 5 மட்டும் ஒளிர்கின்றன. தி புக் ஆஃப்
சால்ம்ஸ் 5 பாகங்களாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளது.
5 என்பதுபிதாவின் கருணையையும் ஆணையையும் குறிப்பதாகும். விவிலியத்தைப் பொறுத்தவரை யானை
என்பது அதிகாரத்தின், ஆட்சியின் குறியீடு’ என்று விலாவாரியாக விவரித்து இருக்கிறார்கள்.
இன்னும் என்னவெல்லாம்
கற்பிதங்கள் வரப்போகிறதோ..?