Share via:
அரியலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஆய்வகத்தில் கணினிகள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் தேளூர் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தில் இருந்து பல மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் செயல்பட்டு வரும் கணினி ஆய்வகத்தில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து பக்கத்து அறைகளுக்கும் கரும்புகை பரவியது. இதனால் 19 மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மூலம் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட போது, மின்கசிவு காரணமாக அங்கு இருந்த கணினி வெடித்து கரும்புகை கிளம்பியுள்ளது தெரியவந்தது. தற்போது மாணவ, மாணவிகளுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.