Share via:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்திய 35 வயதான சிவராமன், முகாமில் தங்கி பயிற்சி பெற்ற 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அதே போல் மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியது.
இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவராமனை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். அப்போது ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது தப்பிக்க முயற்சி செய்த சிவராமனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் நேற்று (ஆகஸ்ட் 21) மாலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிவராமன் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிவராமன், எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் இது குறித்து கேட்ட போது போலீசாரால் கைது செய்யப்பட்ட கடந்த 18ம் தேதியே எலி பேஸ்ட் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனையும் நடைபெற்றது. அதில் அவர் சாப்பிட்ட எலி பேஸ்ட்டின் விஷம் ரத்தத்தில் கலந்து இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிவராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் பள்ளி மாணவியின் பலாத்காரம் விவகாரத்தை மறைக்க முயற்சித்த சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.