Share via:
காக்கிச் சட்டைக்கு
என ஒரு கண்ணியம் இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவருக்கு என ஒரு மதிப்பு இருக்கிறது.
இந்த எல்லைகளைத் தாண்டி இரண்டு பேரும் லோக்கல் ரவுடிகள் போன்று கட்டி உருள்வது வேடிக்கையாக
மாறியிருக்கிறது.
வருண்குமார் எஸ்.பி.
சமூகவலைதளத்தில் இருந்து வெளியேறப் போகிறேன் என்று பிரச்னையை முடித்துவைத்தார். அதன்
பிறகும் சீமான் அவரை வம்பிழுக்கும் வகையில், ‘’காக்கிச் சட்டையைப் போட்டுக்கொண்டு மோதக்கூடாது.
சட்டையைக் கழட்டிவிட்டு வா’’ என்று பேசினார்.
இதற்கு வருண்குமார்,
’’பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது,
நில அபகரிப்பு, ரவுடித்தனம்
செய்வதை சிலர் நிறுத்தினால், நான்
காக்கி சட்டையை விடுவது பற்றி
யோசிக்கிறேன், நான் காக்கி சட்டையில்
இருப்பது அவ்வளவு பயமுமோ? திரள்
நிதியிலோ !! பிச்சை எடுத்ததிலோ வந்த
பதவி அல்ல கடினமாக உழைத்து
இரவு பகலாக படித்து ரத்தம்
வேர்வை கண்ணீர் சிந்தி, சொந்த
உழைப்பில் வாங்கிய வேலை பெற்றோரின்
கருணையால், உரப்புலி குலதெய்வத்தின் அருளால்
UPSC CSE 2010ல் All India
Rank 3 எடுத்ததை நினைவு கூறுகிறேன்’’ என்று
கூறியிருந்தார்.
இதன் பிறகும் தம்பிக்ள்
விடாமல், ‘’திரள்நிதி வாங்குவது
தவறில்லை.. திருமணம் செய்ய இருந்த
பெண்ணிடம் வரதட்சணை வாங்கிவிட்டு பிறகு
திருமணம் செய்யாமல் கழட்டிவிட்டு காவல்துறையால்
கைது செய்யபட்டு சிறைக்கு போவது தான்
தவறு.. கேவலம்’’ என்று பதிவிட்டு அரசியல் சண்டையை குடும்பச் சண்டையாக மாற்றியிருக்கிறார்கள்.
ஆக, இந்த விஷயத்தில்
இனியும் அமைதியாக இருப்பது சரியில்லை. சீமானுக்கு சம்மன் அனுப்பி சமூகவலைதள மோதலுக்குத்
தூண்டிவிடுவதற்கு விளக்கம் கேட்க வேண்டும். அவர் விளக்கம் அளிக்காத பட்சத்தில் சிறையில்
தூக்கிப் போட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.
இந்த நிலையில் கனிமவளக்
கொள்ளை குறித்துப் பேசிய சாட்டை துரைமுருகன், ‘’கேரளாவில் ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்
முதல்வராக இருக்கிறார், இங்கே அப்படி இல்லை. அண்ணன் சீமான் மீது கை வைத்தால் நாங்கள்
எந்த எல்லைக்கும் போவோம்’’ என்று பேசியிருப்பதால், அவருக்கும் சேர்த்தே சம்மன் அனுப்பப்படும்
என்று தெரிகிறது.