Share via:
முதலீடுகள் ஈர்ப்பதற்காக
நாளை அமெரிக்கா புறப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில்
அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் சீனியர் அமைச்சர்களுக்கு
எச்சரிக்கை விடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அரசு முறைப் பயணமாக
முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்ல இருக்கும் நிலையில் இன்று கட்சி நிர்வாகிகளை
அழைத்துப் பேசிய ஸ்டாலின், ‘’இப்போது மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்
என்று அமைதியாக இருக்கிறோம். எந்தக் காரணம் கொண்டும் வரம்பு மீறி பேசிவிட வேண்டாம்.
குறிப்பாக ஜாதி, மதம் குறித்த விஷயங்களில் கருத்துக் கூற வேண்டாம்.
நமது கூட்டணிக் கட்சியினர்
நான் இங்கு இல்லாத நேரங்களில் என்ன பேசினாலும் அமைதியாக இருங்கள். நான் எல்லாவற்றையும்
கவனித்துக்கொண்டு இருப்பேன். மூத்த தலைவர்கள் ஜூனியர் அமைச்சர்களுக்கு வழிகாட்டியாக
இருக்க வேண்டுமெ தவிர, தடைக்கல்லாக இருக்கக்கூடாது. உங்களைப் பற்றிய ரிப்போர்ட் தினமும்
எனக்கு வந்துகொண்டு இருக்கும். எனவே, அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் அமைச்சரவை
மாற்றம் கொண்டுவரும் நிலையை உருவாக்கிவிடாதீர்கள்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறாராம்.
ஸ்டாலின் எத்தனை
முறை எச்சரிக்கை செய்தாலும் மூத்த அமைச்சர்கள் கண்டுகொள்ளப் போவதில்லை என்பது தான்
உண்மை. அடுத்த சில நாட்களில் என்னவெல்லாம் ஏழரைகளை இழுக்கப்போகிறார்களோ..?