News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

உதயநிதியின் கனவான சென்னையில் ஃபார்முலா-4 ரேஸ் பந்தயம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும், இதனை நடத்துவதில் உதயநிதி உறுதியாக இருக்கும் நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடத்துவதற்கு கடந்த டிசம்பர் மாதமே ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், புயல் காரணமாகவும் கடுமையான எதிர்ப்புகள் காரணமாகவும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடத்துவதற்கு முழு அளவுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை காலை ஒரு போட்டி மட்டும் மக்கள் இலவசமாகப் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மற்ற போட்டிகளுக்கு நன்கொடை என்ற வகையில் ஏகப்பட்ட பணம் கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளன.

இந்த நிலையில், சென்னை: ஃபார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து தமிழ்நாடு பா... செய்தித் தொடர்பாளர் பி.என்.எஸ்.பிரசாத் தாக்கல் செய்து, இதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

உடனடியாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு இது அவசர வழக்கு இல்லை என்றாலும் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியவருகிறது. மீண்டும் உதயநிதியின் கனவுப் போட்டிக்கு சிக்கல் வருமா என்பது விரைவில் தெரிந்துவிடும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link