News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு திருமாவளவன் கொடுத்திருக்கும் ஆலோசனையை அடுத்து, தன்னுடைய அரசியல் ஆலோசகரை மாற்ற இருப்பதாகவும் சில சீனியர்களை கட்சிக்கு நியமிக்கும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விஜய் அரசியல் பற்றி பேசிய திருமாவளவன், ‘’எம்ஜிஆர் சினிமாவில் இருந்த காலத்திலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால், அவர் அரசியலில் இருந்து அதாவது ஒரு ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரால் தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட போது நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்கள் அவரோடு வெளியேறினார்கள். அவருடைய வெற்றிக்கு அது ஒரு காரணம். வெறும் சினிமா ரசிகர்களை, ரசிகர் மன்ற தலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு வர அரசியல் செய்யவில்லை.

அவர் கட்சியை தொடங்குகிற போது தி.மு.க-விலிருந்து அவரோடு சேர்ந்து விலகிய பல அரசியல் தலைவர்கள் கட்சியை நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள் அவரோடு இருந்தார்கள். அதனால், வெற்றி பெற முடிந்தது.

அதன் பிறகு, வந்து தலைவர்கள், அதாவது சினிமா மூலம் வந்த தலைவர்கள் அதில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு காரணம். தற்போது மக்களிடையே பிரபலமாக உள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம். விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். அவர் அரசியல் எவ்வளவு கடினமானது… போராட்டங்கள் நிறைந்த ஒரு களம் என்பதை இனி நடைமுறையில் அவர் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும். அவற்றை தாக்குப் பிடித்து அவர் நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார்.

இந்த வார்த்தைகளில் இருந்த அர்த்தம் விஜய்க்குப் புரிந்து போயிருக்கிறது. விஜயகாந்த் கட்சி தொடங்கிய நேரத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை தன்னுடைய பக்கத்தில் வைத்திருந்தார். எனவே, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் சிலர் தனக்குத் தேவை என்ற முடிவுக்கு விஜய் வந்திருக்கிறாராம்.

ஆனால், விஜய்க்கு இப்போது திரைமறைவில் அரசியல் வியூக ஆலோசகராக செயல்படும் ஜான் ஆரோக்கியத்திற்கு இந்த கருத்தில் உடன்பாடு இல்லையாம். பழைய பெருச்சாலிகளை நம்பினால் எதுவும் ஆகாது. நமது ரசிகர் படையே போதும், ஜெயித்துவிடலாம் என்று சொல்லிவருகிறாராம். இவரது ஆலோசனையைக் கேட்டுத் தான் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வில் இருந்து வாழ்த்துக்கள் சொல்லி சந்திக்க நேரம் கேட்ட சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம். இந்த ஜான் ஆரோக்கியம் என்பவர் தான் முன்பு அன்புமணியை நேரடி முதல்வர் என்று களத்தில் இறக்கியவர். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று ஆசை காட்டியவர். எனவே, இனியும் இவரை நம்புவதில் பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

எனவே, மாநாட்டு நேரத்தில் கண்டிப்பாக சில மூத்த தலைவர்கள் தன்னுடைய பக்கத்தில் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து சரியான நபர்களைத் தேடும் பணி நடக்கிறதாம். இதற்கு ஜான் ஆபிரகாம் இடையூறாக இருந்தால் அவரை அனுப்பிவிட்டு புதிய ஆலோசகரை நியமிக்க இருக்கிறாராம்.

எந்தெந்த தலைவர்களுக்கு யோகம் அடிக்கப்போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link