Share via:
எக்ஸ் தளத்தில் இருந்து வருண்குமார் எஸ்.பி. வெளியேறியது குறித்து நாம் தமிழர் சீமான் மீண்டும் எக்குத்தப்பாக பதில் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கொள்ளிக்காட்டில் உள்ள சோழர் கால சிவாலயமான பொங்கு சனீஸ்வரர் திருக்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன்று அதிகாலையில் நேரில் சென்று வழிபட்டார்.
இங்கு கோயிலில் சீமானை சந்திப்பதற்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு காளியம்மாள் வந்திருந்தார். இது குறித்து சீமான் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘’வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இயங்க வேண்டுமே தவிர தி.மு.க.வின் ஐ.டி. விங்காக வேலை செய்யக்கூடாது. நான் பார்க்காத வழக்கு இல்லை. நீயெல்லாம் அதிகாரத்தில் ஒரு புள்ளி மட்டும் தான். நான் அந்த அதிகாரத்தையே எதிர்த்து சண்டை செஞ்சிக்கிட்டு இருக்கிறேன். அகில உலகத்தையும் எதிர்த்து சண்டை செஞ்சவரின் மகன் நான். நீ எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடு, நிறைய குப்பைத் தொட்டி இருக்கிறது. கிழித்துப் போட்டு போய்க்கொண்டே இருப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.
ஐ.பி.எஸ். அதிகாரியை மீண்டும் மீண்டும் கேவலப்படுத்திவருகிறார் சீமான், இவரை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் காவல் துறைக்குத் தான் அவமானம் என்று தி.மு.க.வினர் புலம்பி வருகிறார்கள். வழக்கமாக சீமான் பேச்சுக்கு கைதட்டி ஆர்ப்பரிக்கும் காளியம்மாள், இந்த கூட்டத்தில் அமைதியாக கைகட்டி அமைதியாக நின்றது தான் பரிதாபக் காட்சி.