Share via:
விஜய் கட்சி தொடங்கினால் கூட்டணி குறித்துப் பேசுவேன் என்று சீமான் பேசியதற்கு இது வரையிலும் விஜய் ரியாக்ஷன் தெரிவிக்கவே இல்லை. அதேநேரம், விஜயகாந்த் வீட்டுக்குப் போய் விஜயகாந்த் படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு பிரேமலதா மற்றும் அவரது பிள்ளைகளிடம் பேசிவிட்டு வந்தார்.
விஜய் சந்திப்பு குறித்து இப்போது பேசியிருக்கும் பிரேமலதா, ‘விஜய்யும் என்னுடைய மகன்கள் இருவரும் மிகவும் ஜாலியாக கலந்துரையாடல் நடத்தினார்கள். அரசியலில் விஜயபிரபாகரனே என் சீனியர் என்றும் நன்றாகப் பேசுகிறார் என்று விஜய் பாராட்டினார்’ என்றும் கூறியிருக்கிறார்.
அதோடு கோட் படத்தில் விஜயகாந்த்தை ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் சூசகமாகத் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் கருணாநிதியை எதிர்த்து தேர்தல் அரசியலில் விஜயகாந்த் இறங்கி தனித்து நின்று பெரும் வாக்குகளைப் பெற்றார். அதேபாணியில் ஸ்டாலினை எதிர்த்து விஜய் தேர்தலில் நிற்கப் போகிறார்.
இப்போது, விஜயகாந்த் ஓட்டுக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காகவே விஜய் சந்திப்பு நடந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. விஜயகாந்த் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு மதிப்பும் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கும் ஒன்று சேர்ந்தால் அது மிகப்பெரும் கூட்டணியாக மாறி ஜெயிக்க முடியும் என்று ஸ்கெட்ச் போடப்பட்டிருக்கிறதாம்.
கூட்டணி நல்லாத்தான் இருக்குது என்று விஜய் ரசிகர்கள் குஷியாகி இருக்கிறார்கள்.