Share via:
தனது ரசிகர் ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷன் வீடியோ காலில் பேசியதும், சிகரெட் புகைத்தபடி சக நடிகர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறைச்சாலையில் வி.ஐ.பி. கைதிகளுக்கு சகல வசதிகளும் கிடைக்கிறதா என்ற சந்தேகம் மேலோங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து விசாரணை நடத்த டிஐஜி தலைமையிலான விசாரணைக்குழுவை சிறைத்துறை ஐ.ஜ. அறிவித்திருந்த நிலையில், சிறை ஜெயிலர் உள்ளிட்ட 7 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தர்ஷனை வேறு சிறையில் அடைக்க ஆணையும் பிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, ஷாப்பிங் சென்றுவிட்டு சிறை திரும்பிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. எனவே பரப்பன அக்ரஹாரா சிறை குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.