Share via:
ஜெகத்ரட்சகன் தில்லுமுல்லுக்கு தி.மு.க.வில் செம மரியாதை. கலைஞர்
விருது தர்றாங்கப்பா
கருணாநிதி என்றாலே ஊழல் என்றொரு கருத்தை விதைப்பதில் எதிர்க்கட்சிகள்
தொடர்ந்து இயங்கிவருகிறார்கள். எதிர்க் கட்சியின் கருத்துக்கு அங்கீகாரம் கொடுப்பது
போன்று சமீபத்தில் 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர்
விருது கொடுத்து தி.மு.க. அங்கீகாரம் செய்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன்
மற்றும் அவரது குடும்பத்தினர், 2017ஆம் ஆண்டு சிங்கப்பூர் நிறுவனங்களில் சட்டவிரோதமாக
முதலீடு செய்துள்ளதாக குற்றம் சாட்டியது அமலாக்கத்துறை. இது தொடர்பாக, அந்நியச் செலாவணி
மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, அவர்களின் வீடுகளிலும்
சோதனை நடத்தியது.
அப்போது, ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான 89 கோடியே 19 லட்சம் ரூபாய்
மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி
அமர்வு மற்றும் இரண்டு நீதிபதிகள் அமர்வில் ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி
செய்யப்பட்டன.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ஜெகத்ரட்சகன் சட்டவிரோதமாக
முதலீடு செய்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, 89 கோடி ரூபாய்
மதிப்பு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 908 கோடி ரூபாய் அபராதம்
விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சொத்து பறிமுதல் மற்றும் அபராதத்திற்கு
எதிராக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 17ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.
திடலில் நடைபெறும் தி.முக. பவள விழாவில் ஆண்டு கழக முப்பெரும் விழாவையொட்டி விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அண்ணா
விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகனுக்கும்,
பாவேந்தர் விருது தமிழ்தாசனுக்கு வழங்கப்பட உள்ளது. பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கு
வழங்கப்பட உள்ளது.
இத்தனை சர்ச்சை இருக்கும்
நேரத்தில் ஜெகத்ரட்சகனுக்கு விருது வழங்கும் தி.மு.க.வின் முடிவை நினைத்து உடன்பிறப்புகளே
அதிர்ந்து நிற்கிறார்கள்.