Share via:
செந்தில் பாலாஜியை
எப்படியாவது சிறையில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்று கடுமையாக தி.மு.க. போராடி
வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார் வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
அவரது பதிவில்,
‘’தி.மு.க. வழக்கறிஞர் அணியின் தவறான செயல்பாடுகளால் இப்பொழுது செந்தில்பாலாஜிக்கு
ஜாமீன் கிடைப்பது கடினம் போல தோன்றுகிறது. முறையான கைதி என்ற நிலையி்ல் ஆட்கொணர்வு
மனு அல்லது ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus) தவறாக தாக்கல் செய்த போதே சிக்கல் ஆரம்பித்து
விட்டது.
முதல்வர் ஸ்டாலின்,
அவரின் அமைச்சர்கள் உட்பட கைதி செந்தில்பாலாஜியை சந்தித்தது குற்றம். செந்தில் பாலாஜி
கைது செய்யப்பட்ட அன்று, அமைதியாக சம்மனை வாங்கிக் கொண்டு இருந்தால் கைது நடவடிக்கையே
இருந்திருக்காது. சரி அப்படியே கைது செய்த பிறகும், ரிமாண்ட் செய்யப்பட்டால் ஜெயிலுக்கு
செல்ல வேண்டுமே என்ற நிலையில் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அப்படியே
அவருக்கு உண்மையிலேயே அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்திருந்தால் கூட உயர் நீதிமன்றத்தில்
பெயில் மனு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது மிகப்பெரிய
தவறு.
செந்தில் பாலாஜி
தரப்பு பெயில் அப்ளை செய்வதற்கு பதில் , செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது,
அமலாக்கத் துறைக்கு கைது செய்ய அதிகாரம் கிடையாது. 41A நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று
வாதத்தை மாற்றியது தான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. அமலாக்கத்துறை கைதின்போது
41 ஏ நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது என்று கூட தெரியாத திமுக வழக்கறிஞர்
அணி இதைத்தான் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் நீதிமன்ற காவலில் இருக்கும் ஒருவருக்காக
கீழமை நீதிமன்றத்தில் பெயில் அப்ளை செய்து அது தள்ளுபடி செய்தபின், எப்படி ஆட்கொணர்வு
மனு தாக்கல் செய்யலாம் என்று கேட்டார்.
இதற்குள் ஒரு மாதம்
ஓடி விட்டபடியினால் மேல்முறையீட்டு மனுவுக்காக செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றம்
செல்ல வேண்டியதாகிவிட்டது.. மேலும் உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதமானது
அல்ல. அமலாக்க துறைக்கு கைது செய்ய அதிகாரம் உள்ளது. அமலாக்கத் துறைக்கு காவலில் எடுக்க
அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது.
அமலாக்கத்துறை காவல்
விஷயமாக கீழமை நீதிமன்றமே முடிவு எடுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவல் கொடுத்தது கீழமை நீதிமன்றம். அப்பொழுதுதான் அமலாக்கத்
துறையின் நுட்பமான அறிவு வெளிப்பட்டது. ஆம் யாரும் எதிர்பாராத வண்ணம் 130 பக்க குற்றப்பத்திரிக்கையும்,
3000 பக்க ஆவணங்களையும் அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
பிஎம்எல்ஏ வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது நீதிமன்ற காவலில் இருக்கும் பொழுதே 60 நாட்களுக்குள்
குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டால் குற்றம் சட்டப்பட்டவருக்கு ஜாமீன் கிடைக்கவே
கிடைக்காது.
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட
அதே நாளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று திமுக வழக்கறிஞர்கள் சிறிதும்
எதிர்பார்க்கவில்லை.. அமலாக்கத்துறை காவல் முடிந்து மேலும் ஒரு சில மாதங்கள் கழித்து
தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று ஏமாந்து விட்டார்கள்.
அதனால்தான் செந்தில்
பாலாஜிக்கு நீதிமன்ற காவலில் இருக்கும் பொழுதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட
விட்டபடியினால் கடந்த ஒரு வருட காலமாக ஜாமீன் கிடைக்கவில்லை.
கடந்த 2-9-2024 செந்தில்
பாலாஜி வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையை சுப்ரீம் கோர்ட்டே நேரடியாக கண்காணிக்கும்
என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பாலாஜி தாக்கல் செய்த
அந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு
வந்தது. அப்போது செந்தில் பாலாஜி வழக்கை கீழமை நீதிமன்றம் விசாரிக்கும் போது உச்சநீதிமன்றம்
நேரடியாக கண்காணிக்கும். விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என அவ்வப்போது அறிக்கை பெற்று
மேற்பார்வை செய்ய முடியும் செந்தில் பாலாஜி வழக்கை விரைவுப்படுத்த தமிழக அரசு முட்டுக்கட்டை
போடுவது ஏன்?’’ என்று கேட்டுள்ளது…’’ என்று கூறியிருக்கிறார்.
இதையெல்லாம் வைத்துப்
பார்க்கும்போது, நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையிலும் சிறையில் இருக்க வேண்டியதுதான்
போலிருக்கிறது.