Share via:
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே அவ்வப்போது பேசி வரும் நாம் தமிழர்
சீமான் அவ்வப்போது சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவாக இருந்துவருகிறார்.
இந்த நிலையில் செல்லூர் ராஜூவையும் வளர்மதியையும் விடாதீங்க என்று நாம் தமிழர் கட்சியினர்
கோரிக்கை வைத்திருப்பது சீமானை காப்பாற்றுவதற்கு ஒரு புதிய டெக்னிக் என்று சொல்லப்படுகிறது.
சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம்
தெளிவு படுத்திய பிறகும் அதனை பொதுவெளியில் பயன்படுத்திய சீமான் மீது வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கினை கையாள்வதற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதால்,
எந்த நேரமும் சம்மன் அனுப்பப்படும் என்ற நிலை நிலவுகிறது. இந்த எஸ்.சி.,எஸ்.டி. வழக்கு
சீமானுக்கு எதிராக மாறலாம் என்பதால், அவரை தப்பிக்க வைப்பதற்கு நாம் தமிழர் தம்பிகள்
தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் இடும்பாவனம் கார்த்தி, ‘’’சண்டாளன்’ எனும் வார்த்தையைப்
பயன்படுத்தக் கூடாதென அரசாணை பிறப்பிக்கப்பட்டப் பிறகு, அவ்வார்த்தையை அதிமுகவின் செல்லூர்
ராஜூ பொது நிகழ்வில் பயன்படுத்தி சாடியிருக்கிறார். அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு கண்டனம்
தெரிவித்து அதிமுகவின் சார்பாக வளர்மதி விடுத்த அறிக்கையிலும் சண்டாளன் எனும் சொல்லாடல்
இடம் பெற்றிருக்கிறது.
எஸ்.சி. எஸ்.டி. ஆணையம் அச்சொல்லாடலைப் பயன்படுத்தக் கூடாதென தெரிவித்தப்
பிறகு, பயன்படுத்திய அதிமுகவின் செல்லூர் ராஜூ, வளர்மதி மீதெல்லாம் பாயாத வழக்கு, அரசாணை
விடுப்பதற்கு முன்பு பயன்படுத்திய அண்ணன் சீமான் மீது மட்டும் பாய்வதன் நோக்கமென்ன?’’
என்று கேட்டு அ.தி.மு.க.வையும் நைசாக வழக்கில் சிக்க வைக்கும் முயற்சி எடுத்திருக்கிறார்.
சீமானை காப்பாத்துறதுக்காக எங்களை ஏன் இழுக்குறீங்க என்று செல்லூர்
ராஜூ டென்ஷன் ஆகியிருக்கிறார்.