Share via:
அரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முழுமுனைப்புடன் இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் இருந்து செய்திகள் கசிந்து வருகிறது.
வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி 90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி நடைபெறுகிறது.
அரியானாவில் 2 முறை ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. மூன்றாவது முறையா ஹாட்ரிக் வெற்றி பெற முழுவீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இம்முறை பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியானது திட்டம் தீட்டி வருகிறது. அதற்கு உறுதுணையாக ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்கலாம் என்ற திட்டம் வகுத்து வருகிறது. ஆனால் ஆம் ஆத்மி அரியானாவில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து களம் இறங்கிவிட்டது.
இம்முறை வெற்றி வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு சிறிதும் கிடைக்கக் கூடாது என்று திட்டமிட்டுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 2024ம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியுடன் பல மாநிலங்களில் கூட்டணி அமைத்தது. அதைத்தொடர்ந்து இனி கூட்டணிக்கே வாய்ப்பு இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவாலும், குமாரி செல்ஜாவும் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறிய நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆர்வம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து காங்கிரசின் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து பா.ஜ.க. உன்னிப்பாக கவனித்து வருகிறது.