News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சிரித்துக்கொண்டே ஊசியேற்றுவது போன்று நிர்மலா சீதாராமனை பாராட்டிக்கொண்டே இருந்த அன்னபூர்ணா குழும தலைவர் அடுத்தடுத்து சில நெத்தியடிக் கேள்விகளை எழுப்பியிருப்பது தேசிய அளவில் பெரும் கலாய் காமெடியாக மாறியிருக்கிறது. இதற்கு பா.ஜ.க.வினர் கடுமையான எதிர்வினை ஆற்றுகிறார்கள். எந்த நேரத்திலும் அன்னபூர்ணாவுக்கு இ.டி. அல்லது ஐ.டி. சோதனை நடத்துவதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது.

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் அமைப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அன்னபூர்ணா குழும தலைவர் சீனிவாசன், ‘’எங்களுக்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ வானதி சீனிவாசன் ரெகுலர் அன்னபூர்ணா கஸ்டமர். அவங்க வரும்போதெல்லாம் சண்டை போடுறாங்க. எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க.

அந்த அம்மா கடைக்கு வந்தால்.. பில்லை பார்த்து கேட்பாங்க. ஸ்விட்டுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ளது. அதற்கு இன்புட் உள்ளது. உணவிற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி. அதற்கு இன்புட் கிடையாது. காரத்திற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ளது. பேக்கரியில் பிரெட், பண்ணு தவிர எல்லாவற்றிற்கும் 28 % வரி உள்ளது.

இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க.. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றுக்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவிகிதம் வரி என்றால் சண்டை போடுவாங்க. ஒரே பில்லில்.. ஒரு குடும்பத்திற்கு வேறு வேறு ஜிஎஸ்டி போட முடியவில்லை. ஒரே பில்லில் வேறு வேறு பொருட்களுக்கு வேறு வேறு ஜிஎஸ்டி போட மிஷின் திணறுகிறது. இதை பார்த்து கஸ்டமர்கள் சண்டைக்கு வருகிறார்கள்.

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள்.. நீ பன்ணு கொடு.. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள்.
குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள்.. இல்லை எல்லாவற்றிற்கும் அதிகரியுங்கள். வடநாட்டில் அதிகம் ஸ்வீட் சாப்பிடுகிறார்கள்.. அதனால்தான் அங்கே இணைப்பிற்கு ஜிஎஸ்டி கம்மி.. காரம் சாப்பிடுவதில்லை. அதனால் அதற்கு ஜிஎஸ்டி அதிகம் என்று உங்கள் எம்எல்ஏ வானதி சீனிவாசன்தான் கூறுகிறார்…’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதையடுத்து பா.ஜ.க.வினர் ஆவேசம் அடைந்திருக்கிறார்கள். அன்னபூர்ணாவில் காபி ரேட் அதிகம், பார்க்கிங் பஞ்சாயத்து என்று பல பிரச்னைகளை எழுப்புகிறார்கள். இதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் நிர்மலா சீதாராமன் சிரித்துக்கொண்டே நழுவி விட்டார் என்றாலும் கடும் கோபத்தில் இருப்பதால் எந்த நேரமும் ரெய்டு வரலாம் என்றே கூறப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு வந்து நிம்மதியா ஸ்வீட் சாபிட விடமாட்டேங்கிறாங்களே… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link