Share via:
ஜி.எஸ்.டி. குறித்து
நியாயமான கோரிக்கை வைத்த கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை வரவழைத்து மன்னிப்பு கேட்கப்பட்ட
விவகாரத்துக்கு ராகுல் காந்தி தொடங்கி லோக்கல் கொங்கு மக்கள் வரையிலும் கடுமையாக விமர்சனம்
செய்கிறார்கள்.
அவர் பேசியது, மன்னிப்பு
கேட்டது போன்றவை பெரிய விஷயமல்ல, மன்னிப்பு கேட்டதை வீடியோவாக வெளியிட்டு ஆணவத்தைக்
காட்டியதே பெரும் பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது.
கோவை எம்.எல்.ஏ.
வானதி சீனிவாசனுக்கு நெருக்கமான நபர் என்பதாலே அன்னபூர்ணா சீனிவாசனுக்கு நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமனிடம் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இன்று அவரே, எனக்கும் சீனிவாசனுக்கும்
நெருங்கிய தொடர்பு கிடையாது. அவர் பொய் சொல்கிறார் என்று சொன்னதுடன், அவர் தான் மீண்டும்
மீண்டும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்று கூறியிருக்கிறார்.
ஆனால், அண்ணாமலை
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்புக் கேட்ட வீடியோவை பகிர்ந்ததற்காக, மன்னிப்புக்
கேட்டிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் நிர்மலா சீதாராமன், ‘அவர் பேசியதை நான் பெரிதாகக்
கருதவில்லை’ என்று சொல்லியிருக்கிறாரே தவிர, அவரை அழைத்து மன்னிப்பு கேட்டதற்காக வருத்தம்
தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் நிதி
அமைச்சராக, தமிழிசையோ வானதியோ பொன்னாரா, CPRயோ, எல் முருகனோ, கன்னியாகுமரி காந்தியோ
இருந்திருந்தால், இப்படி மிரட்டி இருப்பார்களா..? இத்தனைப் பெரிய மனிதர்களையே, சர்வசாதாரணமாய்
மிரட்டி மன்னிப்புக் கேட்க வைக்கிற அயோக்கியத்தனமும் துணிச்சலும் எங்கிருந்து வருகிறது..?
அதிகாரம் தானே..? நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் இத்தனை ஆணவமும்
கொழுப்பும் திமிரும் தோரணையும் வந்திருக்குமா..? நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க
வேண்டும் என்று கோரிக்கை வைத்துவருகிறார்கள்.
மன்னிப்பு கேட்டாலும்
கேட்காவிட்டாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இனி சங்கு தான்.