News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

400 ஆண்டு கால பழமையான கோட்டைச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்ததில் 7 பேர் பலியான சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மத்தியபிரதேச மாநிலம் டாடியா நகரில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 400 ஆண்டு கால பழமையான ராஜ்கர்கோட்டை சுவர் திடீரென்று இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்துள்ளது. இந்த திடீர் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அதிகாலை 4 மணிக்கு நடந்ததால் உடனடியாக அவர்கள் மீட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

மீட்புப்பணிகள் நடைபெற்ற நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணநிதியாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மோகன்யாதவ் அறிவித்துள்ளார். இவ்விபத்து குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link