News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தி.மு.க.வில் சிறுத்தைகளுக்கு எதிராக போர்க்கொடி

 

 

மதுவிலக்கு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததை அ.தி.மு.க.வினர் வரவேற்றது போன்று, ஆட்சியில் பங்கு கேட்பதையும் ஆதரிப்பார்கள், இதை வைத்து அணி மாறலாம் என்ற திருமாவளவன் திட்டம் பணால் ஆகிவிட்டது. கட்சிக்குள் பன்னீர், டி.டி.வி.க்கு அதிகாரம் கொடுக்க விரும்பாத எடப்பாடி பழனிசாமி, திருமாவுக்கு ஆட்சியில் பங்கு தரத் தயாராக இல்லை என்பதை ஜெயக்குமார் தெளிவாகவே விளக்கிவிட்டார். இதையடுத்து திருமாவளவன் பல்டி அடித்தாலும் தி.மு.க.வினர் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். திருமாவை வெளியேற்றுங்கள் என்று ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

இந்த சூழலில் மதுரையில் பேசிய திருமாவளவன், “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என, 1999-ல் பேசினேன். இதை நினைவுபடுத்தி செங்கல்பட்டில் நான் பேசியதை எனது, அட்மின் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஏன் அதை நீக்கினார்? எனத் தெரியவில்லை. இன்னும் எனது அட்மினை தொடர்பு கொண்டு பேசவில்லை. அதிகாரம் எளிய மக்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதுதான் எப்போதும் எங்கள் கோரிக்கை. எனக்கு உண்மையில் அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் கேட்டிருப்பேன். இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அரசியலோடு இதை முடிச்சு போடக் கூடாது,” என்று பல்டி அடித்துவிட்டார்.

ஆனாலும் தி.மு.க.வினர் கோபம் தீராமல் விளாசுகிறார்கள். ‘’விசிக தலைவர் மது ஒழிப்பு மாநாடு என்றார்,அரசியல் சார்ந்ததல்ல என்றார். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று அவர் வலைதள பக்கத்தில் பதிவு வந்தது. நிருபர்கள் கேட்டதற்கு எனக்கு தெரியாது அட்மின் தான் காரணம் என்றார். மீண்டும் அந்த பதிவு வந்துள்ளது.. எந்த பதிவுகளும் போடுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆட்சியில் பங்கு கேட்கிறாரே அவர் சார்ந்த சமுதாயத்துக்கா? அல்லது அவர் கூட இருக்கிற ஆட்களுக்கா?

அவர் சார்ந்த சமுதாயத்துக்கு என்றால் அவர்களில் ஒருவர் திமுகவில் அமைச்சராகவே பங்கு வகிக்கிறார். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பங்கு வகிக்கிறார்கள். அவர் கூட உள்ள ஆட்களுக்கு ஆட்சியில் பங்கு என்றால் குறைந்தது இருபத்தைந்து எம்எல்ஏக்களாவது அவர்களுக்கு இருக்க வேண்டாமா? அல்லது தேவேந்திர குல வேளாளர்,அருந்ததியர்களுக்கும் சேர்த்து கேட்பதாக இருந்தால் அவர்களும் ஆட்சியில் பங்கு வகிக்கிறார்கள்.. ஆதிதிராவிடர்களுக்கு எந்த நன்மை செய்வதாக இருந்தாலும் திருமாவளவன் மூலம் செய்ய வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லையே திமுக நேரடியாக அந்த சமுதாய மக்களுக்கு செய்யுமே.. காரணம் திமுக மற்றவர்களை போல் ஒரு ஜாதிய ,மத அமைப்புக்குள் கட்டுண்டு கிடக்கவில்லை.திமுக எல்லா மத, ஜாதியினருக்குமான அரசு. இவர் தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்படுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ம.தி.மு.க.வையும் எதிராகத் திருப்புவார். அதனால் இப்போதே திருமாவை வெளியேற்றுங்கள்’’ என்று குரல் கொடுக்கிறார்கள்.

விரைவில் தி.மு.க.வில் இருந்து சம்மன் வரும் என்றும் விஷயத்தை துரைமுருகன் டீல் செய்வார் என்றும் சொல்கிறார்கள். பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link