Share via:
மதுவிலக்கு மாநாட்டை
கையில் எடுத்து நடத்துவதால் கூட்டணியில் விரிசல் வந்தாலும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்
என்று வீராவேசமாகப் பேசிய திருமாவளவன், இன்று முதல்வரை அறிவாலயத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சியில் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு, முதலமைச்சரை நேரில் சந்தித்து
அழைத்திருக்கிறேன் என்று பல்டி அடித்திருப்பது சொந்தக் கட்சியினரையே திணறடித்துள்ளது.
வரும் 2026 தேர்தலில்
இரண்டு சீட்டாவது கூடுதலாக வாங்கிவிட வேண்டுமென்று ஸ்கெட்ச் போட்டு பேசினார் திருமாவளவன்.
அதற்காகவே மதுவிலக்கு மாநாட்டைக் கையில் எடுத்து அ.தி.மு.க.வும் விஜய் கட்சியும் பங்கேற்கலாம்.
பா.ஜ.க.வும் பா.மக.வும் மட்டும் வரக்கூடாது என்று சொன்னார்.
இந்த விவகாரத்திற்கு
தி.மு.க.வினர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்றதும் ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும்
பங்கு என்று ஒரு கோஷத்தை முன்வைத்தார். இதில் தி.மு.க.வினரை விட அ.தி.மு.க.வினர் டென்ஷன்
ஆகிவிட்டனர். அதோடு, நேரில் வந்து அழைத்தால் மட்டுமே மதுவிலக்கு மாநாட்டுக்கு வருவோம்
என்று கண்டிஷன் போட்டுவிட்டனர்.
இந்த நிலையில், தங்களை
சாதிக்கட்சி என்று அழைத்த திருமாவுக்கு பா.ம.க.வின் அன்புமணி கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே
வேறு வழியின்றி அவரிடம், ‘பா.ம.க பி.எச்.டி. நாங்கள் எல்.கே.ஜி.’ என்று சரண்டர் ஆனார்.
திருமாவுக்கு கம்யூனிஷ்ட் மற்றும் ம.தி.மு.க.வினர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றதும்
மீண்டும் ஸ்டாலினிடமே சரண்டர் ஆகி, மதுவிலக்கு மாநாட்டுக்கு வரச்சொல்லி கெஞ்சியிருக்கிறார்.
அன்னபூர்ணா சீனிவாசனை நிர்மலா சீதாராம் கூப்பிட்டு மன்னிப்பு கேட்க வைத்ததற்கும் இந்த
சந்திப்புக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதே உண்மை.
இந்த சந்திப்புக்கு
குறித்துப் பேசிய திருமாவளவன், ’அரசியலுக்காக மதுவிலக்கு மாநாட்டை நடத்தவில்லை. டாஸ்மாக்கை
மூடுவது அத்தனை சுலபமில்லை என்பது தெரியும். அது மிகவும் லாபம் தரக்கூடிய தொழில். எனவே,
தேசிய மதுவிலக்குக் கொள்கையை உருவாக்கி தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியிருக்கிறேன்’’
என்று மூன்று நாட்களுக்கும் எக்கச்சக்க பல்டி அடித்திருக்கிறார்.
அதோடு, ‘திமுக மற்றும்
விடுதலை சிறுத்தைகள் இடையே எந்த விரிசலும் இல்லை இந்த நெருடலும் இல்லை இவையெல்லாம்
ஊடகங்களால் ஏற்படுத்தக்கூடிய மீடியா ஹைப். அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்தமைக்கு
வாழ்த்து தெரிவிரித்தோம்’’ என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்
விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இதுக்கு அந்த பருத்தி
மூட்டை குடோனிலே இருந்திருக்கலாம்.