Share via:
சவுக்கு சங்கருக்கு
மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டிருக்கிறது. சீமான் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சீமான் கட்சியினர் கைது செய்யப்பட்டதும் ஒட்டுமொத்த நாம் தமிழர் கூடாரமும்
கதிகலங்கிப் போயிருக்கிறது. இனிமேல் எச்சரிக்கையாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கட்சி
கட்டளை போட்டிருக்கிறது.
சாட்டை துரைமுருகன்
கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரது செல்போனில் இருந்து மயிறு, பிசிறு போன்ற ஆடியோக்கள்
வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில், திருச்சி எஸ்.பி. வருண்குமார்
பற்றி சீமான் மேடையில் எக்குத்தப்பாக எகிறினார்.
அதை பார்த்ததும்
குஷியாகிப் போன நாம் தமிழர் கட்சியின் ஏரியா நிர்வாகிகள் அருண் எஸ்.பி. குறித்து அநாகரீகமாவும்,
எச்சரிக்கையாகவும் பதிவு போட்டார்கள். இந்த விவகாரத்தையடுத்து சீமான் தொடங்கி சாட்டை
துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சீமான் பேச்சியில்
தன்னை மறந்த திருச்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், ‘நாங்கள் ஆட்சிக்கு வரும் முன்னரே
இறந்துவிடுங்கள். இல்லையென்றால் அண்ணன் சொன்னாலும் கேட்க மாட்டோம்’ என்று ஒரு பதிவு
போட்டார்.
அவரது பதிவுக்கு
நாம் தமிழர் ஐ.டி. விங் ஆட்களே ஃபயர் விட்டார்கள். நம் எதிரிகளுக்குப் புரியும் பாணியில்
பதிலடி கொடுத்திருகிறார் என்று பாராட்டித் தள்ளினார்கள். ஆனால், யாரும் எதிர்பாராத
வகையில் இந்த விவகாரத்திற்காக கண்ணனை போலீஸ் கைது சென்று தூக்கிவிட்டது.
அது வரை கெத்து காட்டிய
நாம் தமிழர் ஐ.டி. விங் இப்போது சட்டென பதுங்கிக்கொண்டு ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், ‘அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறோம் என்கிற அதிகாரத் திமிரில் அவர்கள் அநாகரீகமாகவும்
, வக்கிரமாகவும் நாம் தமிழர் கட்சியினரை தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். நாம்
எத்தனைமுறை வழக்கு தொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
அவர்களின் அநாகரிக
விமர்சனங்களுக்கும் , அவதூறுகளுக்கும் நம்மவர்கள் பதில் தரும் போது அதில் வரும் சொற்களை
வைத்து நமது உறவுகளை பாசிச அதிகாரப் போக்கில் கைது செய்கிறார்கள் . அதிகாரம் அவர்கள்
கையில் இருப்பதால் நமது உறவுகள் சற்று கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தவும். தேவையில்லாத
விவாதத்திற்குள் செல்ல வேண்டாம், விமர்சனத்தை நாகரீகமாகவும் தகுந்த சொற்களை பயன்படுத்தியும்
எழுதவும்’ என்று நாம் தமிழரின் ஊடகப் பிரிவு மற்றும் தகவல்தொழில்நுட்பப் பாசறை கேட்டுக்கொண்டுள்ளது.
அதுசரி, நாம் தமிழர்
தம்பிங்க அண்ணன் சொன்னாலும் கேட்க மாட்டாங்களே… திரும்பத் திரும்ப அட்டாக் செய்வாங்களா
இல்லைன்னா மண்டியிடும் வீரம்னு மாறுவார்களா என்று பார்க்கலாம்.