Share via:
காதலியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட 9ம் வகுப்பு மாணவன் செய்த காரியம் டெல்லி போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த 3ம் தேதி (ஆகஸ்ட்) டெல்லி நஜாப்நகரை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் இருந்த நகைகள் காணவில்லை என்று டெல்லி போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதாவது தனது வீட்டில் இருந்த 2 தங்க சங்கிலிகள், ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு மோதிரம் காணாமல் போனதாக அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புகார் அளித்த பெண்ணின் வீட்டருகே உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.அதில் வீட்டிற்கு யாரும் வந்ததாகவோ, வெளியே சென்றதாகவோ தெரியவிலலை. இதைத்தொடர்ந்து போலீசாரின் சந்தேகம் புகார் அளித்த பெண்ணின் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் மீது திரும்பியது.
இதைத்தொடர்ந்து மாணவனின் பள்ளி நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மாணவன் சமீபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புதிய ஐபோன் ஒன்றை வாங்கியதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது.
அதாவது தந்தையை இழந்த மாணவனுக்கு படிப்பில் ஈடுபாடு இல்லாததும், அதே வகுப்பில் உடன் படிக்கும் மாணவியுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மாணவியின் பிறந்தநாளை முன்னிட்டு பரிசளிக்க வேண்டி தாயிடம் பணம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே அவரின் தங்க நகைகளை மாணவன் திருடியுள்ளார். இதைத்தொடர்ந்து விற்கப்பட்ட தங்க நகைகளை மீட்ட போலீசார், நகைகளை மாணவனிடம் இருந்து வாங்கிய கமல் வர்மா என்பவரை கைது செய்தனர்