Share via:
ஆபாசமாகப் பேசுவதில் தி.மு.க. அமைச்சர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும்
வகையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு எதிராக அ.தி.மு.க.வினரும் தி.மு.க. இளைஞர்
அணியினரும் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘’நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவாங்க;
ஆனா, அவங்களுக்கு அறிவு இருக்காது. அதெல்லாம் எம்.ஜி.ஆரோடு போய்விட்டது. எம்.ஜி.ஆரை
வைச்சிருந்ததாலே ஜெயலலிதா அரசியலுக்கு வர முடிந்தது’ என்று கொச்சையாகப் பேசினார்.
இந்த விவகாரம் அ.தி.மு.க.வில் புயல் வீசியிருக்கிறது. இதுகுறித்து அ.தி.மு.க.வின்
ஐ.டி.விங் ராஜ் சத்யன், ‘’உலகத் தமிழர்கள் அனைவரும் தாயாகக் கருதும், மக்களுக்காகவே
வாழ்ந்து மறைந்த தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் பற்றி, பத்தாண்டு காலம் ஆட்சியில்
அமரவிடாமல் செய்த வன்மத்தை கக்கும் விதமாக மிக இழிவாக பேசியதன் மூலம், அமைச்சர் பதவியில்
இருப்பதற்கான அனைத்து மாண்பையும் இழந்துட்டீங்க
தா.மோ.அன்பரசனுக்கு சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியான அனைத்து வழிகளிலும் உங்களுக்கு
எதிராக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழரின் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக
இருங்கள் ! பொதுவெளியில் செல்லும் போது சற்று கவனம்,உங்களின் நாலாந்தரப் பேச்சைக் கேட்டு
மக்கள், குறிப்பாக பெண்கள் கொதித்துப் போயுள்ளார்கள். அம்மாவின் பக்தர்கள் யாராவது
காலணி வீசினாலோ, அம்மா மீது அன்பு கொண்ட தாய்மார்கள் விளக்குமாறுடன் உங்களுக்கு சிறப்பான
வரவேற்பு அளித்தாலோ நாங்கள் பொறுப்பல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுவதில் அன்பரசனுக்கு உடன்பாடு
இல்லை. அதனால் தான் நடிகர்கள் அடுத்து அரசாள முடியாது என்று பேசியிருக்கிறார் என்று
பா.ஜ.க.வின் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் தி.மு.க.வினரும் அன்பரசன் மீது காட்டமாக இருக்கிறார்கள். ‘’நடிகர்கள்
அரசாள முடியாது என்று நடிகர் விஜய்யை சொல்வது என்றால் நேரடியாகப் பேசியிருக்கலாம்.
அமைச்சர் பூடகமாகப் பேசியிருப்பதன் காரணமே, உதயநிதியை குறி வைத்துத் தான். அடுத்து
அமைச்சரவையில் இருந்து இவரை தூக்க வேண்டும்’’ என்று உடன்பிறப்புகளும் கொதிக்கிறார்கள்.