Share via:
வரலாறு காணாத பேரழிவை சந்தித்திருக்கும் வயநாட்டு நிலச்சரிவில்
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார் ராகுல் காந்தி. நிவாரண முகாம்களில்
தங்கள் உறவுகள், உடைமைகளை இழந்து சோகத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களை சந்தித்து ராகுல்
காந்தியும் பிரியங்கா காந்தியும் ஆறுதல் கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‘’வயநாடு
நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.. என் தந்தை இறந்தபோது நான்
எப்படி உணர்ந்தேனோ அதைவிட துன்பத்தை இன்று
நான் உணர்கிறேன்’’ என்று பேசியிருக்கிறார்.
பாஜக ஆளும் மணிப்பூர், இடதுசாரிகள் ஆளும் வயநாடு என்றாலும் ஓடோடிச்
சென்று துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார் ராகுல்காந்தி. இதையடுத்து
ராகுல் காந்திக்கு செல்வாக்கு பெருகுவது மட்டுமின்றி மக்கள் பிரதமர் என்று பாராட்டி
வருகிறார்கள்.
இந்த நிலையில் ராகுல் காந்தியை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு
பா.ஜ.க. அரசு முயற்சி செய்வதாக தகவல்கள் வருகின்றன. அமலாக்கத்துறை ரெய்டு நடத்தவும்
ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் போன்று சிறையில் அடைத்து அவரை ஊழல்வாதி என்று முத்திரை
குத்தவும் பா.ஜ.க. முயற்சி செய்கிறது. எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை ராகுல் காந்தி
வீட்டுக்கு விசிட் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,
‘’சக்கர வியூகம் பற்றி நாடாளுமன்றத்தில் நான் பேசியதால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர்
என் மீது அமலாக்கத் துறையை ஏவி விட காத்திருக்கின்றனர். தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளுடன்
அமலாத்துறையை வரவேற்க காத்திருக்கிறேன்.’’ என்று தில்லாகப் பேசியிருக்கிறார் ராகுல்
காந்தி.
தேசிய அரசியல் சூடு பிடிக்கிறது.