Share via:
ஆயிரம் கோடி ரூபாயில் கட்டிய நாடாளுமன்றம் ஒழுகுகிறது தி.மு.க.வினர்
மோடியை குறை சொல்லிவரும் நிலையில் காவிரி கொள்ளிடத்தில் தடுப்பணை உடைந்திருக்கிறது.
இதுகுறித்து எதிர்க்கட்சியினர், ‘’சில மாதங்களுக்கு முன்னர்
6.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்துபோயிருக்கிறது. அதே போல் இந்த தடுப்பணை அருகில் இருந்த உயர் அழுத்த
மின் கோபுரத்தின் கான்கிரிட் தூண்களும் சாய்ந்து விட்டன என்பது அப்பணியின் தரத்தினை
குறிக்கிறது. 6.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை 6 மாதங்கள் கூட நிலைக்காதது
இந்த ஆட்சியின் இயலாமையை, நிர்வாக சீர்கேட்டை உணர்த்துகிறது. தரமற்ற இந்த பணியினை செய்த
அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..’’ என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மின்
கோபுரங்கள் சரிந்துள்ளன. நேற்று நள்ளிரவு ஆற்றின் நடுவே இருந்த ஒரு மின் கோபுரம் விழுந்த
நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு மற்றொரு மின் கோபுரமும் ஆற்றில் மூழ்கியது.
அதேநேரம் இந்த விஷயங்களுக்கு எல்லாம் காரணம் அ.தி.மு.க. தான் என்று
தி.மு.க.வினர் குற்றம் சாட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் தி.மு.அ.வினர்,
‘’உண்மையில் உடைந்துபோனது தடுப்பணை அல்ல. மண் தாங்கு சுவர் (Bed Protection wall) அதனுடைய
பணியே பாலத்தின் கீழே மண் சேகரமாவதை உறுதி செய்வதுதான்.
2018 வெள்ளத்தில் பாலத்தின் கண் அடித்துச் செல்லப்பட்டபோது அதனைத்
தடுக்க 2020ல் அரசாணை வெளியிடப்பட்டு இந்த மண் தாங்கு சுவர் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
ஆற்று படுகையை பாதுகாக்கும் வகையிலும் பால அடிமானத்தின் அருகில் மணல் சேர்வதற்காகவும்
கட்டப்பட்ட இந்தச் சுவரின் ஒருபகுதியில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. முழுமையான விபரம்
நீர் வரத்து குறைந்தால் தான் துறை அலுவலர்களுக்கே தெரியவரும்.
இந்த லட்சணத்தில் பாலங்களும் அணைகளுமே உடைந்துவிடும் லட்சணத்தில்
நிர்வாகம் செய்யும் பாஜகவும், இந்த தாங்கு சுவர் கட்டுமானத்தை டெண்டர் விட்டு தொடங்கியதே
தாங்கள் தான் என்பதை அறியாத அதிமுக அடிமைகளும் தி.மு.க.வை குறை சொல்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் மழை நீர் ஒழுகுகிறது. அதை பிளாஸ்டிக் வாளியில்
பிடிக்கிறார்கள். இவர்கள் எப்படி திராவிட மாடலை குறை சொல்லலாம்’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
பா.ஜ.க.வோ, தி.மு.க.வோ யாரும் மக்களுக்கு உருப்படியா எதுவும் செய்றதில்லை
என்பது தான் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.