Share via:
முதல்வர் ஸ்டாலின்
அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இம்மாதம் அமெரிக்கா செல்வதற்கு
முன்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பேச்சு பலமாக அடிபடுகிறது.
அதோடு அமைச்சரவை மாற்றமும் இருக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் இன்று
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில், ‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை
முதலமைச்சர் ஆக வேண்டும்
என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த
கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிப்பாரா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை” என
தெரிவித்தார். இந்த பதிலை வைத்துப் பார்க்கும்போது, முதல்வர்
அமெரிக்கா செல்வதற்கு முன்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைப்பதற்கு வாய்ப்பு
இல்லை என்றே தெரிகிறது.
அதேநேரம், இந்த ஆண்டு
இறுதிக்குள் அவருக்கு துணை முதல்வர் பதவி ஒப்படைக்கப்பட்டு 2026 தேர்தலில் வெல்வதற்கு
வியூகம் அமைக்கப்படும் பணியும் ஒப்படைக்கப்படும் என்கிறார்கள்.