Share via:
அதானி குழுமத்துக்கும் செபி தலைவர் மாதாபி பக் மற்றும் அவரது கணவருக்கும்
இடையிலான முதலீடு குறித்து அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டு
அலற விட்டுள்ளது.
அதன்படி, அமைப்பான செபியின் தலைவர் திருமதி மாதாபி பக் மீதும்
அவரது கணவர் தவால் பக் ஆகிய இருவரும் IIFL IPE Plus Fundல் இவர்கள் இருவரும் முதலீடு
செய்துள்ளார்கள். இதில் முதலீடு செய்யச் சொன்னது அனில் அகுஜா, அவர் அதானி குழுமத்தின்
இயக்குனர்களில் ஒருவர். இந்த ஃபண்டு 2019க்கு பிறகு அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு
செய்து இருக்கிறது.
இதனால் அதானி குழுமத்திற்கு favouritism ஆக நடக்க செபியின் தலைவருக்கு
அவசியம் இருந்திருக்கிறது. செபியின் தலைவர் ஆன பிறகும் தனது கணவர் பெயரில் இருந்த அந்த
ஃபண்டினை இவர் தான் கையாண்டிருக்கிறார் என்பதை அவரது தனிப்பட்ட ஈமெயில் போக்குவரத்துக்
கூறுகிறது என்கிறது ஹிண்டன் பர்க்ஸ் அறிக்கை.
செபி என்பது செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப்
இந்தியா. 1992 இல் இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஒழுங்குமுறை அமைப்பு
இது பல லட்ச கோடிகள் புரளும் இந்திய பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்துவதோடு, பத்திரங்களில்
முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கிறது. அந்த செபியின் தலைவர்
தான் மாதாபி. இவர், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது தான் மக்களின்
எதிர்பார்ப்பு.
பொதுவாக ஒரு மியூச்சுவல் ஃபண்டில் வேலை பார்க்கும் கடைநிலை விற்பனை
பிரதிநிதி அந்த நிறுவன பண்டுகளில் முதலீடு செய்திருக்கக் கூடாது, அவரது குடும்ப உறுப்பினர்களும்
முதலீடு செய்திருக்கக் கூடாது என்பது விதி. ஆனால் இந்த விதியை செபி அமைப்பின் உச்சத்தில்
இருக்கும் தலைவர் பின்பற்றவில்லை என்பதுதான் இங்கே குற்றச்சாட்டு.
கடந்த ஆண்டு ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு கூறிய நேரத்தில் அந்த
நிறுவனம் மீது அதானி வழக்குப் போடுவதாகக் கூறியிருந்தார். ஆனால், இது வரையிலும் அவர்
வழக்குப் போடவே இல்லை. கடந்த முறை வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது செபி எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை.
இந்த முறை உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தானே முன்வந்து விசாரணை
செய்ய வேண்டும். நடக்குமா என்று பார்க்கலாம்.