News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழ்நாட்டின் இன்ஜினியரிங் கல்லூரிகளில் பணிபுரியும் 13,891 பேராசிரியர்கள் முறையான ஐ.டி. இல்லாமல் பணிபுரிவதாகவும், மேலும், ஒரே நேரத்தில், ஒரே ஆசிரியர்கள் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நிரந்தரப்பணியாளர்களாக இருக்கும் மோசடியையும் அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஒரு ஆசிரியர் ஒரு கல்லூரியில் மட்டுமே பணிபுரிய முடியும். ஆனால், அண்ணா யுனிவர்சிட்டியில் மாரிச்சாமி, முரளிபாபு, அரங்கராஜன், வெங்கடேசன், வசந்தா சுவாமிநாதன் ஆகியோர் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நிரந்தரப் பணியாளர்களாகப் பணியாற்றுவது தெரியவந்துள்ளது.

அறப்போர் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதை பொய் புகார் என்று சொல்லி தப்பிக்க முடியாது.

இந்த கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளிலும் பணிபுரிகிறார்களா? அல்லது வேறு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் பெயர்களை இந்த கல்லூரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்களா? இப்படி பல கல்லூரிகளில் பேராசிரியர்களாக ஒரே நபர் பணி செய்வதை ஆய்வுக்கு சென்ற அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடிக்கவில்லையா? அல்லது கண்டும் காணாமல் இருந்தார்களா?

ஒவ்வொரு பேராசிரியருக்கும் AICTE இணையத்தில் Unique Id கல்லூரி உள்ளீடு செய்யும் வழிமுறை உள்ளது, வேற எங்கேனும் பணியில் இருந்ததால் அந்த கல்லூரி பேராசிரியர் பட்டியலில் இணைக்க முடியாது. ஆனால் முறையான, AICTE வழங்கிய Unique IDஐ Entry செய்யாமல், போலித்தனமாக AU, AUU, AU1, Number1, AU1000 போன்று போலியான ID வழங்கி முழுநேர பேராசியராக இருப்பவர்கள் எண்ணிக்கை மட்டும் 13,891 பேர். இவர்கள் அங்கு உறுதியாக பணியில் இருக்கிறார்களா?, மேலும் அப்படி தனிப்பட்ட ID வழங்காதவர்கள் தகுதியான பேராசியரா என்பதும் சந்தேகமே.! எனவே முழுநேர பேராசிரியர்களுக்கு உரிய தனிபட்ட ID தரவுகள் வழங்கபடாமல் பணிபுரிவதாக சொல்லப்படும் 13,891 பேராசிரியராக பணிபுரிவதை ஆய்வு செய்து தகுதியான பேராசிரியர்களா என்பது விசாரிக்கப்பட வேண்டும்

மாணவர்களுக்கு இந்த வருட பொறியியல் கலந்தாய்வு தொடங்க இருக்கும் இந்த நேரத்தில், பேராசிரியர்கள் மோசடி குறித்த விளக்கத்தை தமிழக அரசும், தமிழக ஆளுநரும் உடனடியாக வெளியிட்டு மாணவர்கள் பயத்தை போக்கவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு. ஆசிரியர்களே மோசடியாளர்களாக இருந்தால் மாணவர்கள் நிலைமை என்னாகும்..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link