Share via:
தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தை கூட இடம்பெறாத மோடி அரசின் பட்ஜெட்டை
தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க.வைத் தவிர இரண்டே இரண்டு பேர் முழுமையாக வரவேற்றுள்ளனர்.
அவர்கள் இருவரையும் தமிழினத் துரோகிகள் என்று சமூகவலைதளங்களில் செம கலாய் செய்துவருகிறார்கள்.
பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்தாலும் பா.மக.வின் ராமதாஸ், டி.டி.வி.தினகரன்
ஆகியோர், தமிழகத்திற்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டு பா.ஜ.க. பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி இந்த பட்ஜெட்டுக்கு
கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டுக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்.
‘பொருளாதாரத்தில் முக்கியக் கவனத்தை செலுத்தும் பொறுப்பு வாய்ந்த அறிக்கை. நாட்டை முன்னேற்றப்பாதையில்
அழைத்துச்செல்லும் பட்ஜெட்’ என்றெல்லாம் வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.
அதேநேரம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், ‘2047-ம் ஆண்டுக்குள்
சமமான, அனைவரையும் உள்ளடக்கிய, வலிமையான மற்றும் நிலையான தன்னிறைவு பாரதத்தை வளர்த்து,
2030-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறுவதற்கு இந்த
நிதிநிலை அறிக்கை வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது’ என்று பாராட்டு தெரிவித்திருகிறார்.
தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு செய்திருப்பதை கண்டிக்காமல் அல்லது
வருத்தம் கூட தெரிவிக்காமல் பாராட்டு தெரிவித்திருக்கும் இருவரையும் சமூகவலைதளத்தில்
வறுத்தெடுத்து வருகிறார்கள்.
பா.ஜ.க.வினரே தலையைக் குனிந்த் நிற்கும் நிலையில் அவர்களை விட
மோசமாக ஜால்ரா போடுகிறார் என்று பன்னீர்செல்வத்தையும் ஜூலை 31ம் தேதியுடன் பதவி முடிவுக்கு
வருவதால் பதவி நீட்டிப்புக்கு துண்டு போட்டு வைக்கிறார் ஆர்.என்.ரவி என்றும் விமர்சனம்
செய்கிறார்கள்.
தமிழர்களிடம் ஓட்டு வாங்கிக்கொண்டு, தமிழக மக்களின் நிதிப்பணத்தில்
சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தமிழர் நலனை புறக்கணிக்கும் இருவரையும் புறக்கணிக்க
வேண்டும் என்று அ.தி.முக.வினர் ஓங்கி அடித்துவருகிறார்கள். இருவருக்கும் தமிழினத் துரோகிகள்,
அடிமைகள், ஓசிச்சோறு என்றெல்லாம் கிண்டல் செய்துவருகிறார்கள்.