News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கும் மோனிஷ் ராய் எனப்படும் தமிழச்சிக்கும் இடையிலான பஞ்சாயத்தை திருச்சி சூர்யா அம்பலப்படுத்தியிருந்தார். இவர்களை சேரவிடாமல் சீமானே தடுத்தார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழச்சி, ‘’நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பரப்ப என்னை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம். நான் எப்போதும் அண்ணன் சீமானின் தங்கைதான்; நாம் தமிழர் கட்சிதான்! உங்க அரசியலுக்கு என்னை இழுக்காதீர்கள்! தயவுசெய்து என்னை விடுங்கள்’’ என்று கூறியிருந்தார்.

இடும்பாவனம் கார்த்தியும் இதுகுறித்து, ‘பாதிக்கப்பட்ட பெண் எந்த புகாரும் கொடுக்காத நிலையில் இது பிரச்னையே இல்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த பிரச்னையை பெரிதுபடுத்திய திருச்சி சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் நிலையில், தமிழச்சிக்கு திருச்சி சூர்யா ஸ்பெஷல் அட்வைஸ் செய்திருக்கிறார்.

திருச்சி சூர்யா இது குறித்து, ‘’தங்கை தமிழச்சி, தங்களது வீடியோவை பார்த்தேன். நீங்கள் தனிப்பட்ட முறையிலோ, கட்சியிடமோ சமரசம் பேசி பிரிந்துவிட்டீர்கள் என்றால்,உங்கள் சொந்த விவகாரங்களில் தலையிட்டு கிசுகிசு பேச வேண்டும் என்றோ அல்லது அதை வைத்துத்தான் நான் அரசியல் செய்ய வேண்டும் என்ற தேவை எனக்கு கிடையாது.

நீங்கள் உங்கள் முகநூலில் நான் பாதிக்கப்பட்டு விட்டேன் என்னை இவர்கள் பயன்படுத்தி ஏமாற்றிவிட்டார்கள் என்று நீங்கள் பகிர்ந்த புகைப்படங்களை வைத்து மட்டுமே அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க உதவுவோம் என்ற நல்ல நோக்கத்தில்தான் அந்த ஆடியோக்கள் பகிரப்பட்டன.

நீங்கள் தற்போது செய்யும் செயலால் உண்மையாக பாதிக்கப்பட்ட,பாதிக்கப்படவிருக்கும் பெண்களுக்கு உதவுவதற்கு யாரும் வர மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆடியோக்கள் யாருடைய மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன? என்பது ஊர் அறிந்ததே. உங்கள் தனிப்பட்ட ரகசிய விஷயங்களை சாட்டை துரைமுருகன் தொலைபேசியில் வைத்திருந்ததற்கு காரணம் என்ன? மாற்று அரசியல் என்று கூறிவிட்டு ரவுடிகளிடம் கூட தேர்தலுக்கு பணம் வசூலிப்பது, சாதிவெறியோடு வாக்குகளுக்கு திட்டமிடுவது, சக கட்சிகாரர்களை சீமான் கேவலமாக பேசியது என பல்வேறு ஆடியோ பதிவுகளில் ஒரு பதிவாகத்தான் நீங்கள் சொல்கிற ஆடியோவும் வெளிவந்திருக்கிறது.

நியாயமாக பார்த்தால், அந்த ஆடியோக்கள் லீக்காக காரணமாக இருந்த சாட்டை துரைமுருகன் மீதுதான் நீங்கள் புகார் கொடுத்திருக்க வேண்டும். மற்றபடி, நீங்கள் கொடுத்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link