Share via:
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமரவைப்பதற்காக
பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோருடன் அ.தி.மு.க. தொடர் ஆலோசனை மேற்கொண்டு
வருகிறது. இந்த நிலையில், அவர் தொடங்கி நடத்திவரும், ‘ஜன சுராஜ்’ அமைப்பை அரசியல் கட்சியாக
மாற்றும் பிரஷாந்த் கிஷோர் நேரடியாக அடுத்த ஆண்டு பீகார் தேர்தலை சந்திக்க இருப்பதாகத்
தெரியவந்துள்ளது.
ஐபேக் எனும் அமைப்பு மூலம் இந்தியாவில் தேர்தல் திட்டமிடுதலுக்கு
அடிக்கல் போட்டவர் பிரசாந்த் கிஷோர். பாஜக, ஆம் ஆத்மி, திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,
திருணாமுல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளுக்காக அவர் பணியாற்றி, பெரும்பாலான கட்சிகளை
வெற்றி பெற வைத்திருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்ற விருப்பம்
தெரிவித்தார். ஆனால், ராகுல் காந்தி அதனை அனுமதிக்கவில்லை. அவர் பா.ஜ.க.வுக்கு திறைமறைவு
வேலை செய்துவருவதாக ராகுல் நினைத்தாலே அவரை நெருங்கவிடவில்லை. இதையடுத்து கடந்த நாடாளுமன்றத்
தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ர்கசியமாக பணியாற்றியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்திலிருந்து
பிரஷாந்த் கிஷோரின் ஜன சுராஜ் அமைப்பு அரசியல் கட்சியாக மாறும் என்று அறிவித்திருக்கிறார்.
அதோடு, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பற்றிய அறிவிப்பு, கொள்கைகள் வகுக்கப்படும் என்றும்
கூறியிருக்கிறார். இதையடுத்து பீகாரைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் பிரஷாந்த் கிஷோரின்
கட்சியில் இணைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் வரும் 2026 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பணியாற்றுவாரா
என்று கேள்வி எழுப்புகையில், ‘அவரது ஐபேக் அமைப்பு எப்போதும் போல் தேர்தல் பணிகளில்
ஈடுபடும். அதற்கும் அவரது அரசியல் நுழைவுக்கும் தொடர்பு இல்லை…’’ என்கிறார்கள்.