Share via:
கேரள மாநிலம் வயநாட்டில் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை,
அட்டமலை உள்ளிட்ட இடங்களில் கடுமையான
நிலச்சரிவினால் வீடுகள்,
கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள்
மண்ணுக்குள்
புதைந்து போயின. பேய் மழை, பெருவெள்ளம் காரணமாக ஏற்பட்ட மலைச்சரிவால் ஏற்பட்டுள்ள
உயிர் சேதங்களும், பொருள் சேதங்களும் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
178 பேர் இதுவரை
பலியாகி இருப்பதாக சொல்லப்படுவது ரொம்பவே குறைவு என்கிறார்கள். ஏனென்றால் தோண்ட தோண்ட
மனித உடல்கள் கிடைத்துக்கொண்டே இருப்பது பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கிறது. இறந்தவர்களின்
துயரங்களை விட, கை, கால்கள் இழந்து பாதிக்கப்பட்டவர்கள், உடமைகளை இழந்தவர்களின் நிலை
இன்னும் பரிதாபம்.
உள்ளூர் மக்கள்,
ராணுவம், தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்புப் படையினரும் தங்களது சக்தி முழுமையும்
பயன்படுத்தி களப்பணி ஆற்றுகிறார்கள் என்றாலும் இன்னமும் பாதியளவு மீட்புப்பணிகள் கூட
முடிவுக்கு வரவில்லை என்பதே நிஜம். மீட்கப்பட்ட உடல்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதிலும்
பெரும் சுணக்கம் நிலவுகிறது.
திருவனந்தபுரத்தில்
உள்ள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில்
இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி
விஜயனும், ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆகியோர் வயநாட்டுக்கு நேரில் சென்று மீட்புப்
பணிகளை கண்காணிக்கவுள்ளனர்.
பிரதமர் நரேந்திர
மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் இன்று பாதிக்கப்பட்ட
பகுதிகளைப் பார்வையிட வருகிறார்கள். உலகெங்கும் இருந்து நிதியுதவிகள் குவிந்துவரும்
நிலையில், இன்னமும் இதை தேசியப் பேரிடராக அறிவிக்கப்படவில்லை.
இயற்கை வளத்தை எல்லை
மீறி சுரண்டிய காரணத்தாலே இந்த கொடூரம் நிகழ்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால்,
கேரளா வயநட்டின் மேற்கு தொடர்ச்சி
மலைப்பகுதி இயற்கை
வளம் மிகுந்தது. மரங்கள் அடர்த்தியாக நிறைந்திருக்கும் இந்த பகுதியில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தியதால் வந்த
கேடு தான் இது. இந்த பகுதியில் உள்ள மரங்கள் முழுவதுமாக
அழிக்கப்பட்டுள்ளதாலே மழை வெள்ளத்தைத்
தாங்கிக்கொள்ள மரங்கள் இல்லாமல் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மரங்கள் நிரம்பியிருந்தால்
இதன் காரணத்தாலே பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் முழுமையாகப் புதைந்து போயிருக்கின்றன.
நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் போதே அதன் மேலும்
நிலச்சரிவு ஏற்பட்டு உயிர்களை பலி வாங்கியிருக்கிறது.
செய்திகளில் காட்டப்படுவதை விட மிக மோசமான இயற்கைப் பேரிடர் என்பதே உண்மை.
அத்தனை பேரும் கேரளத்தின்
பக்கம் நிற்க வேண்டிய நேரம் இது. அதேபோல் இயற்கையிடம் படித்துக்கொள்ள வேண்டிய பாடமும்
இது.