Share via:
பிரதமர் மோடியை கேடி என்று பகிரங்கமாக விமர்சித்த தி.மு.க. எம்.பி. மீது கைது நடவடிக்கை பாயும் சூழ்நிலை உருவாகியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2024& 2025 மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மத்திய அரசு முற்றிலுமாக ஒதுக்கிவிட்டது. ஆந்திரா, பீகாருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில், தமிழ்நாட்டுக்காக எந்த அறிவிப்பும், சலுகையும் வெளியாகாதது அரசியல் களத்தில் பல்வேறு விமர்சனங்கள எழச்செய்தது.
இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்கிற வார்த்தையே இடம்பெறவில்லை. எப்போதும் இடம்பெறும் திருக்குறள் கூட இல்லை. இதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசும்போது, நான் தமிழனாக பிறக்க முடியவில்லையே. அடுத்த பிறகு என்ற ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும். தமிழ் பேச வேண்டும் என்று பேசினார். ஆனால் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை இந்த கேடி மோடி என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த பேச்சுக்கு பாஜக துணை தலைவர் நாராயணன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனிடம் யார் கேடி? சட்டவிரோதமாக 764 தொலைபேசி இணைப்புகளை தனது வீட்டில் வைத்துக் கொண்டு சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி அரசின் பல கோடி ரூபாயை கொள்ளையர்கள் கூட்டம் பிரதமர் மோடியை கேடி என்று சொல்வது முழு அயோக்கியதனம் என்று தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி யாராவது அவதூறாக பேசினால், உடனே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆனால் தி.மு.க. எம்.பி. பிரதமர் மோடியை கேடி என்று விமர்சனம் செய்துள்ளார். எனவே அவரை கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதோட தி.மு.க. கட்சி சார்பில் தயாநிதிமாறன் எம்.பி.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.