News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் இருந்து முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். அரை நிர்வாணமாக கிடந்த பெண் மருத்துவரை பார்த்த சக மாணவ, மாணவிகள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மாணவியில் உடலில் பல்வேறு இட்ஙகளில் காயங்கள் இருந்தது சக மாணவர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியது.

 

விரைந்து சென்ற போலீசார் சடலமாக கிடந்த பயிற்சி பெண் மருத்துவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் மருத்துவர் முதுகலை 2ம் ஆண்டு மாணவி என்பதும், அவர் ஆர்ஜிகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவராக செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

 

மேலும் கடந்த வியாழக்கிழமையன்று மருத்துவமனையில் இரவு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனால் அப்போது அவருடன் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

 

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உயிரிழந்த பெண்ணின் பெற்றோரை வரவழைத்து, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

 

பெண் பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link