Share via:
போஸ்வெங்கட் இயக்கத்துல விமல், சாயாதேவி நடிப்புல ரெடியாகியிருக்கிற படம் தான் சார். 1980ஸ் கால கட்டத்த மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்கிற இந்த படத்துல 2வது முறையா விமல் ஆசிரியர் கதாபாத்திரத்துல நடிக்கிறாரு. காதல், காமெடி, சென்டிமெண்ட், சண்டைக்காட்சிகள்னு மொத்த பேக்கேஜா ரெடியாகி இருந்த படத்துக்கு மியூசிக் சித்துகுமார்.
சார் படத்தோட ஆடியோ லாஞ்ச் ரொம்ப சிறப்பா நடந்துச்சு. இதுல விஜய்சேதுபதி, வெற்றிமாறன், சரவணன்னு பலர் கலந்துக்கிட்டாங்க. அப்ப பேசிய விஜய்சேதுபதி, சரவணனை பாத்து அழகா இருந்தீங்கன்னு சொன்னாரு. அத கேட்ட சரவணன், விஜய்சேதுபதியோட கால தொட்டு கையெடுத்துக் கும்பிட்டாரு. உடனே விஜய்சேதுபதி, கொஞ்சம் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க’’ன்னு சொன்னாரு.
அப்ப குறுக்க பேசின சரவணன், இந்த வார்த்தைய சொல்றதுக்கு காரணம், அடுத்த படத்துல நான் விஜய்சேதுபதிக்கு அப்பாவா நடிக்கிறேன். அதனாலதா அவர் அப்படி சொல்றாருன்னு பேசினாரு சரவணன். எதுவா இருந்தா என்ன இப்படி வயசு வித்தியாசம் இல்லாம கால்ல விழுறதுன்னு சரவணனை கலாய்க்கிறாங்க நெட்டீசன்ஸ்.