Share via:
வருகிற 18ம் தேதி (ஆகஸ்ட்) கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணய வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நூற்றாண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பாக மேற்கொள்ள எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத்சிங் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தி.மு.க. அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.