Share via:
.மு.க. கூட்டணியை உடைத்துக்கொண்டு திருமாவளவன் வெளியே வந்துவிடுவார்
என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.வினர் திடீரென அவருக்கு ஆதரவாக நின்று உரக்கக் குரல்
கொடுத்தார்கள். ஆனால், திருமாவளவனின் கோபம் ஒரே ஒரு கொடி ஏற்றுவதற்கு அனுமதி கிடைக்காதது
என்று தெரிந்ததும் அடிமைவளவன் என்று சமூகவலைதளத்தில் கடுமையாகத் தாக்குதல் நடத்திவருகிறார்கள்.
1991 ஏப்ரல் 14 ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகளின் முதல் கொடியை
மதுரை கோ புதூரில் திருமாவளவன் ஏற்றி வைத்தார். அந்த கொடிக் கம்பத்தை 62 அடி உயரத்திற்கு
புதுப்பிக்கப்பட்டு விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் திறந்து வைப்பதற்கு
ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நேரத்தில் மதுரை காவல் துறையினர் போக்குவரத்துகுகு இடைஞ்சலாக
இருக்கிறது என்று அகற்றிவிட்டார்கள்.
முதல் கொடிக்கம்பம் பறிபோன கோபத்தில் இருந்தார் திருமாவளவன். இதையடுத்து,
‘கொடிக்கம்பத்தை மதுரையில் காவல்துறையினர் அகற்றிய காட்சி வேதனை தருகிறது. ‘கோட்டையில் கொடியேற்றுவோம்’ என்று முழங்கிய அண்ணன்
திருமாவளவனை வீதியில்கூட கொடியேற்ற விடாமல் தடுத்து முடக்குகிறது திமுக! ‘அடங்க மறு!
அத்துமீறு! திமிறி எழு! திருப்பி அடி!’ என்று அவரது ஆதரவாளர்கள் கொதித்து எழுந்தார்கள்.
இதையடுத்தே திருமாவளவன் மதுவிலக்கு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு
அழைப்புவிடுத்தார். ஆனால், ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் உடனடியாக
சந்தித்துப் பேசி மதுரை கொடிக்கம்பத்துக்கு அனுமதி வாங்கிவிட்டார். இந்த கொடி ஏற்றும்
விழா நேற்று மதுரையில் நடைபெற்றது. அப்போது திருமாவளவன், ‘ஒரு கொடி ஏற்றுவதற்கே இன்னமும்
நாம் போராடும் நிலையில் தான் இருக்கிறோம்’ என்று வேதனைப்பட்டிருக்கிறார்.
ஒரே ஒரு கொடிக்கம்பத்துக்காக ஸ்டாலினிடம் சரண்டர் ஆன திருமாவளவனை
இப்போது அ.தி.மு.க.வினர் கடுமையாக விமர்சனம் செய்து அடிக்கிறார்கள். ‘திருமாவளவனை அடிமைவளவன்’
என்று தொடர்ந்து கிண்டல் செய்கிறார்கள்.