Share via:
இலங்கையின் முதல் இடதுசாரி ஜனாதிபதியாக அநுர குமார திசநாயக்க இன்று
பொறுப்பேற்றுள்ளார். பதவி ஏற்கையில் அவர், “நான் மந்திரவாதி அல்ல… இலங்கையின்
சாதாரண குடிமகன். என்னிடம் திறமைகள் மற்றும் இயலாமைகள் உள்ளன. எனக்கு தெரிந்த மற்றும்
தெரியாத விஷயங்கள் உள்ளன. ஜனாதிபதியாக இந்தப் பயணத்தில் எனது திறன்களை மேலும் மேம்படுத்தி,
அதிக அறிவைப் பெற விரும்புகிறேன்…’ என்று பேசியிருக்கிறார். இடதுசாரி என்றாலும் இந்தியாவுக்கும்
விடுதலைப்புலிகளுக்கும் எதிரான உறுதியான நிலைப்பாடு கொண்டவர் என்பதால் இலங்கைத் தமிழர்கள்
அச்சத்தில் இருக்கிறார்கள்.
அநுர குமார திசநாயக்க தமிழகப் பகுதியில் மிகவும் குறைவாக
38,832 வாக்குகளே வாங்கியிருக்கிறார். மட்டக்களப்பு மக்கள் சஜித் பிரேமதசாவிற்கு சுமார்
120,588 வாக்குகளை அளித்திருக்கிறார்கள் தமிழீழ தலை நகரமான திரிகோணமலை மகாண மக்கள்
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு 18,524 வாக்குகளை அளித்திருக்கிறார்கள் திரிகோணமலை
மகாண மக்கள் திரிகோணமலை மகாணத்தில் ரணில் விக்ரசிங்கே 40,496 ஓட்டுகளை வாங்கியுள்ளார்
நாமல் ராஜபக்சே 2183 ஓட்டுகளை மட்டும் வாங்கியுள்ளார். ஆக, தனக்கு எதிராக வாக்களித்திருக்கும்
இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் இடையூறாகவே இருப்பார் என்று தெரிகிறது.
யார் இவர்..? ஜேவிபி என்று அழைப்படுகிற இடது சாரி கட்சியின் தலைவர்.
இலங்கை கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து பிரிந்து புதிய அமைப்பை உருவாக்கியவர் ரோகன விஜய
வீர என்பவர். 1971 மற்றும் 1987 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அரசுக்கு எதிராக புரட்சியில்
ஈடுபட்டார். ஜேவிபி அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பாக அன்றைய சனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தனே
அறிவித்தார். ஜேவிபி அமைப்பை சார்ந்தோரை ஆயிரக்கணக்கில் இலங்கை அரசு சுட்டுக்கொன்றது.
1989 ஆம் ஆண்டு ரோகன விஜயவீராவை ராணுவம் கைது செய்து சுட்டுக்கொன்றது.
அத்துடன் ஜேவிபி தேர்தல் பாதைக்கு மாறியது. அன்றிலிருந்து ஆட்சியை பிடிக்க போராடியது.
2024 ஆம் ஆண்டு இப்போது தான் இலங்கை அதிகாரத்தை ஜேவிபி பிடிக்க முடிந்தது. பிடல் காஸ்ட்ரோ
வழியில் புரட்சி நடத்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என கலகம் செய்த ரோகன விஜயவீராவின்
கனவு அவரோடு சேர்ந்தே சுட்டுக்கொல்லப்பட்டது. இப்போது சனநாயக வழியில் ஆட்சியை பிடித்திருக்கிறார்
அநுரா. இவர் சிங்கள இனவாதிகளை போலவே செயல்படுவார் என கடந்த காலங்களில் அவர்களது செயல்பாடுகளை
வைத்து தமிழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வாக்குகளும் அநுராவுக்கு எதிராகத்தான் தமிழ்
மக்கள் வாக்களித்துள்ளனர்.
தமிழர்களது வாக்கு சஜீத் பிரேமதாசாவுக்கும் அரியநேந்திரனுக்கும்
விழுந்துள்ளது. தமிழர்களது இனப்பிரச்சனையை தீர்க்ககூடிய சனாதிபதியாக அநுரா இருக்கப்போவதில்லை.
ஏனென்றால் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் தேசிய இனப்போராட்டத்துக்கு எதிராக செயல்பட்ட
அமைப்பு ஜேவிபி. ஆனாலும் தமிழீழ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கூடியவராகவும் அச்சத்தை
போக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என்பது தான் தமிழீழ மக்களின் எதிர்பார்ப்பு.
அதே நேரத்தில், இந்தியாவின் கைப்புள்ளையாக அநுர குமார திசநாயக்கா இருக்க மாட்டார் என்பது
தெளிவாகிறது.
சீன ஆதரவாளரான இவர் ஒருபோதும் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கப்போவதில்லை.
எனவே இனியும் இந்திய அரசு காப்பாற்றும் என்று எண்ணிக் கொண்டிருக்காமல் தமிழக மீனவர்கள்
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் ஒரு சோதனை ஆரம்பமாகியிருக்கிறது.
அமைதியை விரும்புவதாகக் கூறியிருக்கும் அநுர குமார திசநாயக்கா அப்படியே நடந்துகொண்டால்
நல்லது.