Share via:
மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்சசியை கண்டுகளித்து மயங்கிவிழுந்த பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறை உரிய விளக்கமான பதில் அளிக்க வேண்டும் என்று உள்துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படை நடத்தி விமான சாகசத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். காலை 11 மணிக்கு முதல் மதியம் 1 மணிவரை நிகழ்ச்சி நடைபெற்றதால் வெயில் காரணமாகவும், கூட்ட நெரிசல் காரணமாகவும் பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோர் மயங்கி விழுந்தனர். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் 100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மெரினா விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்புகள் குறித்து தமிழக காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவசர ஆலோசனைக் கூட்டத்தில் விரிவான விளக்கம் கேட்ட நிலையில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.