Share via:
திரள்நிதி மூலம் தன்னுடைய வாழ்க்கையையும் கட்சியையும் நடத்திக்கொண்டு
இருப்பவர் நாம் தமிழர் கட்சியின் சீமான். அவரது கட்சித் தலைமை அலுவலகமான இராவணன் குடில்
வாங்கப்பட்ட பண பரிவர்த்தனையில் குளறுபடி நிலவியிருப்பதால் அமலாக்கத்துறை சோதனை நடத்தவேண்டும்
என்று தி.மு.க.வினர் ஆதாரம் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து தி.மு.க.வினர், ‘’தலைமை அலுவலகம் ராவணன் குடிலுடைய
ஆவணப்படி மொத்த சந்தை மதிப்பு 7.5 கோடி.. ஆனால் 1.5 கோடிக்குதான் பத்திரப்பதிவு ஆகியிருக்குறது.
மீதம் 6 கோடி கருப்புப்பணமாக கைமாறியுள்ளது. எனவே இதை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்.
கட்சி அலுவலகம் வாங்க பொதுமக்களிடம் அல்லது கட்சி தொண்டர்களிடம் வசூல் செய்து வாங்கினால்
அதை கட்சியின் அறக்கட்டளையின் பெயரில்தான் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணைய
விதிமுறை.. ஆனால் இங்கு பாக்கியநாதன் என்கிற தனிநபர் மீது பதிவாகியிருக்கிறது. எனவே
இதை தேர்தல் கமிஷன் விசாரிக்க வேண்டும்.
ஒரு கட்சி வெளிநாடுகளில் வசூல் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம்
சொல்கிறது. அவ்வாறு வசூல் செய்தால் அக்கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யலாம். நாதக
வெளிநாடுகளில் பல கோடிகளை வசூல் செய்திருப்பதை அக்கட்சி நிர்வாகிகளே பல மேடைகளில் முழங்கியுள்ளனர்.
பாக்கியராசன் பெயரில் வாங்கப்பட்ட நாதக தலைமை அலுவலகத்துக்கு சரியான வரி கட்டவில்லை.
எனவே வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும்..
டிடிவி தினகரன் இதுபோன்ற ஒரு வழக்கிற்குதான் ஃபெரா சட்டத்தில்
பாஜக கைது செய்தது. அதனால் சீமானையும் தாராளமாக விசாரிக்கலாம்… இவற்றை எல்லாம் மத்திய
அரசின் கைவசம் உள்ள அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. விரைந்து விசாரிக்க
வேண்டும். இந்த ஆதாரங்கள் கொடுக்கப்பட்ட பிறகும் நடவடிக்கை இல்லை என்றால், பா.ஜ.க.வின்
பி டீம் என்பதை உறுதிபடுத்துவதாக இருக்கும்’’ என்கிறார்கள்.
சீமான் பதில் சொல்வாரா அல்லது விசாரணை நடக்கப்போகிறதா..?