News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழக அரசு உத்தரவின்படி இன்று (ஜூலை16ம் தேதி) 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

*தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், உள்துறை செயலாளராக இருந்து வந்த அமுதா ஐ.ஏ.எஸ். தற்போது வருவாய் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

*சிட்கோ இயக்குனராக இருந்த மதுமதி ஐ.ஏ.எஸ். பள்ளி கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவத்தின் எதிரொலியாக அந்த சமயத்தில் ஆட்சியராக இருந்த ஷ்ரவன்குமார் ஜடாவத் தற்போது நகர்ப்புற மேம்பாட்டு வாரிய துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் துறை இயக்குனராக இருந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ். ராணிப்பேட்டை ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா ஐ.ஏ.எஸ். புதுக்கோட்டை ஆட்சியராகவும், லட்சுமி பவ்யா ஐ.ஏ.எஸ். நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் ஆட்சியராக பிரியங்கா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்தினசாமி ஐ.ஏ.எஸ்.சும், கடலூர் ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அழகுமீனா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் ஐ.ஏ.எஸ்.சும், ராமநாதபுரம் ஆட்சியராக சிம்ரன் ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link